விநாயக முதலியார்

விநாயக முதலியார் இலங்கையின் வட அந்தலையில் உள்ள நகரமான பருத்தித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு செல்வந்தராவார். கப்பல்கள் பல மூலம் செல்வந்தராக இருந்த இவர் மக்கள் சேவையிலும் நாட்டமுள்ளவராக இருந்தார். இவரைப் பாராட்டி பிரித்தானிய அரசு முதலியார் என்ற பட்டத்தை வழங்கியது. இன்று பருத்தித்துறையில் உள்ள வீதியான விநாயக முதலியார் வீதி இவரின் ஞாபகமாகவே வைக்கப்பட்டப் பெயராகும்.

தபால் நிலையம்

தொகு

1800 காலப்பகுதியில் இலங்கையில் தகவல் பரிமாற்றம் மிக மந்தமான நிலையிலேயே இருந்தது. தகவல்கள் ஒரு நகரில் இருந்து மற்றய நகரிற்குச் சென்றடைய பல வாரங்கள் எடுத்தது. இந்தக் குறையைத் தீர்த்துவைக்க விநாயகம் அவர்கள் பருத்தித்துறை நகரில் ஒரு தபால் நிலையத்தை அமைத்து வைத்தார். இந்தத் தபால் நிலையத்தைத் தனது வீட்டில் அமைத்தார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.[1]

இவரது சந்ததியில் தோன்றிய வடிவேலு, சிதம்பரம் மற்றும் ஆறுமுகநாதன் போன்றவர்கள் திருகோணமலையில் கப்பல் நிறுவனங்களை நடத்தினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Archives of Point Pedro". 31 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2016.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விநாயக_முதலியார்&oldid=2140645" இலிருந்து மீள்விக்கப்பட்டது