வினைத்திறமிக்க கார்பனைல் இனங்கள்
வினைத்திறமிக்க கார்பனைல் இனங்கள் (Reactive carbonyl species) என்பவை உயர் வினைத்திறன் கொண்ட கார்பனைல் குழுக்களைக் கொண்ட மூலக்கூறுகளைக் குறிக்கும். புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள், லிப்பிடுகள் எனப்படும் கொழுப்புகளை சேதப்படுத்தும் விளைவுகளை இவ்வினங்கள் கொடுக்கும் என்பதாக இவை அறியப்படுகின்றன. வளர்சிதை மாற்ற விளைபொருள்களாக அல்லது சுற்றுச்சூழலில் இருந்து வழிப்பெறுதிகளாக இவை தருவிக்கப்படுகின்றன. தாவரங்களில் காணப்படும் காசுபசு போன்ற புரோட்டியேசுகளை செயலூக்கம் செய்வதற்காக பல்வேறு வினைத்திறன் மிக்க கார்பனைல் இனங்கள் அறியப்படுகின்றன [1]. α,β-நிறைவுறா கார்பனைல் சேர்மங்கள் என்றும் டையால்டிகைடுகள் என்றும் வினைத்திறன் மிக்க கார்பனைல் இனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன [2].
எடுத்துக்காட்டுகள்:
- மெத்தில்கிளையாக்சால்
- கிளையாக்சால்
- அசிட்டால்டிகைடு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Analysis of Reactive Carbonyl Species Generated Under Oxidative Stress". Methods in Molecular Biology 1743: 117-124. 2018. doi:10.1007/978-1-4939-7668-3_11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4939-7667-6. பப்மெட்:29332291.
- ↑ Semchyshyn, Halyna M.; Lushchak, Volodymyr I. (2012). "Interplay Between Oxidative and Carbonyl Stresses: Molecular Mechanisms, Biological Effects and Therapeutic Strategies of Protection". Oxidative Stress - Molecular Mechanisms and Biological Effects. pp. 9–46. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5772/35949. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-953-51-0554-1.
{{cite book}}
: Unknown parameter|name-list-format=
ignored (help)