வினைத்தொழில் சோகீரனார்
வினைத்தொழில் சோகீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது நற்றிணை 319 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.
புலவர்பெயர் விளக்கம்
தொகுதலைவன் தான் செய்ய விரும்பும் தொழிலில் சோகம் காண்பதை இப்பாடல் தெரிவிப்பதால் இப்பாடலைப் பாடிய புலவர் பாடற்பொருளால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளார்.
பாடல் சொல்லும் செய்தி
தொகு- திணை - நெய்தல்
காதலிக்குக் காப்பு மிகுந்துள்ளது. நள்ளிரவில் தலைவன் உறக்கமின்றித் தன் காதலியை எண்ணிக்கொண்டிருக்கிறான்.
ஓதம் - கடல்லை ஓய்வின்றி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஊதை - ஊதைக்காற்று 'அவ் அவ்' என்று உதடுகள் நடுங்கும்படி வீசுகிறது.
கூகை - மணல் பரந்துகிடக்கும் தெருச் சதுக்கத்தில் இருந்துகொண்டு குழறுகிறது.
அணங்கு - நள்ளிரவில் அணங்குகள் தரையில் கால் பாவி நடமாடுகின்றன.
இந்த வேளையில் பாவை போன்ற அவளது முலை முயக்கம் என் நெஞ்சை வாட்டுகிறது; என் செய்வேன் என்று காதலன் கலங்குகிறான்.