வினைப் பெயர்

வினைச்சொல்லில் இருந்து உருவாகும் பெயர்ச்சொல் வினைப் பெயர் எனப்படுகின்றது. வினைப் பெயர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை:

  1. ஆக்கப் பெயர்கள்
  2. தொழிற் பெயர்கள்

ஆக்கப் பெயர்கள் வினைச் சொல்லிலிருந்து தோன்றினாலும், அவை எல்லா விதங்களிலும் ஒரு பெயர்ச் சொல்லைப் போலவே செயற்படுகின்றன. ஒழுக்கம், மறைவு, வளர்ச்சி, எழுச்சி, சிறப்பு என்பன ஆக்கப் பெயர்கள் ஆகும். இவை வினைச்சொற்களான, ஒழுகு, மறை, வளர், எழு, சிற ஆகிய வினைச் சொற்களில் இருந்து உருவாகின்றன. இவை, சொற்றொடர்களில் எழுவாயாக வருதல், பெயரெச்சங்களை ஏற்றல், வேற்றுமைகளை ஏற்றல் முதலிய பெயர்ச் சொற்களுக்கு உரிய பண்புகளை உடையவை.

தொழிற் பெயர்கள் பெயர்களைப் போலச் செயற்பட்டாலும், பல சந்தர்ப்பங்களில் வினச் சொற்களின் பண்புகளையும் வெளிக்காட்டுகின்றன. தொழிற் பெயர்களைக் காலம் காட்டாத தொழிற் பெயர்கள், காலம் காட்டும் தொழிற்பெயர்கள் என இரண்டாக வகுத்துப் பார்க்க முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைப்_பெயர்&oldid=2987562" இலிருந்து மீள்விக்கப்பட்டது