வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கணத் தொடர். வினைமுற்றுகள் பெயராக மாறி நின்று மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முற்றுப்பெறுவது இது.

வந்தான் என்பது ஒரு வினைமுற்று.
வந்தான் சென்றான் என்னும்போது வந்தான் என்பது வினையாலணையும் பெயர். இதில் வந்தான் என்னும் வினைமுற்றோடு பெயர் அணைந்துகொண்டு வந்தவன் ஒருவனை உணர்த்துவதைக் காணலாம்.

இந்த வினையாலணையும் பெயர்

வந்தானைக் கண்டான்.
வந்தானால் சாய்ந்தான்
வந்தானுக்குக் கொடு
வந்தானிடமிருந்து போனான்
வந்தானது உயரம்
வந்தானிடம் கோல் உள்ளது
வந்தானே நில்

என்றெல்லாம் பிற வேற்றுமை உருபுகள் கொண்டும் வரும்.

வினையாலணையும் பெயர் மூன்று வகைப்படும்.தொகு

தெரிநிலை வினையாலணையும் பெயர்தொகு

காலம் காட்டும் - திட்டியவனை அடித்தேன்

குறிப்பு வினையாலணையும் பெயர்தொகு

உயர்ந்தவரைப் போற்றுவர்

எதிர்மறை வினையாலணையும் பெயர்தொகு

செல்லாதவனுக்கு செல்வாக்கில்லை.

  • குறிப்பு

வந்தான் என்னும் சொல் தனிச்சொல்லாக நிற்கும்போது அதனை வினைமுற்று எனவே கொள்ளவேண்டும். வந்தான் கண்டான் - எனத் தெரிநிலை வினைமுற்றைக் கொண்டோ, வந்தான் நல்லன் - எனக் குறிப்பு வினைமுற்றைக் கொண்டோ முடியும்போதுதான் 'வந்தான்' என்பதனை வினையாலணையும் பெயர் எனக் கொள்ள வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினையாலணையும்_பெயர்&oldid=3319224" இருந்து மீள்விக்கப்பட்டது