வினை மூலக்கூறு எண்
வேதியியலில் வினை மூலக்கூறு எண் (Molecularity) என்பது ஒரு வேதிவினையின் எளிய படிநிலையில் ஈடுபடக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.[1] மேலும், இவ்வினை மூலக்கூறு எண் முதல் படிநிலை வினையில் ஈடுபடும் வினைபடுபொருள்களின் வேதி நேர்தகவுக் கெழுக்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.[2] வினையில் ஈடுபடும் மூலக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு வினையானது ஒரு மூலக்கூறு வினையாகவோ இரு மூலக்கூறு வினையாகவோ அல்லது மும்மூலக்கூறு வினையாகவோ அமையலாம். ஒரு வினை ஒன்றுக்கு மேற்பட்ட படிநிலைகளில் நிகழ்ந்தால் மொத்த வினைக்கான மூலக்கூறு எண் கணக்கிடப்படுவதில்லை. ஆனால், எளிய வினைகளில் மூலக்கூறு எண் மற்றும் வினை வீதம் ஆகியவை சமமாக இருக்கும். மூலக்கூறு எண் சுழியாக அல்லது பின்னமாகவோ இருக்க இயலாது.மூலக்கூறு எண் எப்போதும் எதிர்க்குறியை பெற்றிருப்பதில்லை.
ஒரு மூலக்கூறு வினைகள்
தொகுஒரு மூலக்கூறு வினையில், ஒரு தனித்த ஒற்றை மூலக்கூறு தனது அணுக்களை மறுஆக்கம் செய்வதன் மூலம், வேறுபட்ட மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.[1] இது பின்வரும் சமன்பாட்டால் விளக்கப்படுகிறது.
என்பது முறையே வினைபடுபொருளையும் வினைவிளைபொருளையும் குறிக்கும். இந்த வினையின் படிநிலை ஒரே ஒரு வினைவிளைபொருளைக் கொண்டிருந்தால் ஒரு மாற்றியமாக்கல் வினையாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விளைபொருள்களைக் கொண்டிருந்தால சிதைவு வினையாகவோ அமையும்.
மேற்கூறிய எந்தவொரு நிகழ்வாயினும், வினையின் வேகம் அல்லது படிநிலை என்பது முதல் படி வினைவேகச் சமன்பாட்டால் குறிக்கப்படுகிறது.
இதில், என்பது வினைபடுபொருள் A-இன் செறிவையும் என்பது காலத்தையும் என்பது வினைவேக மாறிலியையும் குறிக்கும்.
இரு மூலக்கூறு வினைகள்
தொகுஒர் இரு மூலக்கூறு வினையில், இரண்டு மூலக்கூறுகள் மோதிக் கொண்டு ஆற்றல், அணுக்கள் அல்லது அணுக்களின் குழுக்களை பரிமாறிக் கொள்கின்றன.
கீழ்கண்ட சமன்பாட்டின் மூலம் இதை விவரிக்கலாம்
இரண்டாவது வரிசை விகித சட்டத்தை இது ஒத்திருக்கிறது: .
இங்கு, வினையின் வீதம், வினைப்பொருட்கள் ஒன்று சேரும் விகிதத்திற்கு ஏற்பபாமைகிறது. இரு மூலக்கூறு வினைக்கான எடுத்துகாட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Atkins, P.; de Paula, J. Physical Chemistry. Oxford University Press, 2014
- ↑ Temkin, O. N. State-of-the-Art in the Theory of Kinetics of Complex Reactions. In Homogeneous Catalysis with Metal Complexes: Kinetic Aspects and Mechanisms, John Wiley and Sons, ltd, 2012
- ↑ Morrison R.T. and Boyd R.N. Organic Chemistry (4th ed., Allyn and Bacon 1983) p.215 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-205-05838-8