வினோத் காம்ப்ளி

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

வினோத் கன்பத் காம்ப்ளி 18 சனவரி 1972 (Vinod Ganpat Kambli மராத்தி: विनोद कांबळी) மும்பையை சேர்ந்த இந்திய துடுப்பாட்ட வீரர். 1991ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காம்ப்ளி அறிமுகமானார். கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய சில மாதங்களிலே டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து திடீர் புகழ் பெற்றார். இவர் இதுவரை 17 டெஸ்டில் பங்கேற்று நான்கு சதம் உட்பட 1087 ரன்களும், 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இரண்டு சதம் உட்பட 2477 ரன்களும் எடுத்துள்ளார்.

வினோத் காம்ப்ளி, பிரபல துடுப்பாட்ட வீரரான சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் . இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தின் போது இணைந்து 664 ரன்கள் எடுத்து சாதனை படைத்தனர்.

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

முதல் தரத் துடுப்பாட்டம்

தொகு

2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். நவம்பர் 16, மும்பையில் நடைபெற்ற மத்தியப் பிரதேச மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 99 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்து பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் ஐந்து ஓவர்கள் வீசி மூன்ரு ஓட்டங்களை விட்டுக் கொடுத்தி ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இதில் இரு ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரன்டாவது ஆட்டப் பகுதியில் ஐந்து ஓவர்களை வீசி ஆரு ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. மேலும் அதில் மூன்று ஓவர்களை மெய்டனாக வீசினார்.மட்டையாட்டத்தில் 25 பந்துகளில் 24 ஓட்டங்களை எடுத்து பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[1]

சர்வதேசப் போட்டிகள்

தொகு

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

1993 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சனவரி 29,கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 28 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்து ஜார்விஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 26 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து இருதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி எட்டு இலக்குகளால் வெற்றி பெற்றது.[2] 1995 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 8, கட்டாக்கில் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 28 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்து ஜார்விஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 26 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப்போட்டி சமனில் முடிந்தது.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

தொகு

1991 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி துபாயில் சுற்றுப் பயணம் செய்து வில்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடியது.அக்டோபர் 11 சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் மட்டையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி அறுபது ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[3] 2000 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி துபாயில் சுற்றுப் பயணம் செய்து கோகோ கோலா கோப்பைத் தொடரில் விளையாடியது.அக்டோபர் 29 சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இறுதி போட்டி ,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 15 பந்துகளில் மூன்று ஓட்டங்கள் எடுத்து வாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 245 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[4]

சான்றுகள்

தொகு
  1. "Full Scorecard of Mumbai vs Madhya Pradesh, Ranji Trophy, 2nd Innings - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
  2. "Full Scorecard of India vs England 1st Test 1993 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
  3. "Full Scorecard of India vs Pakistan, Wills Trophy, 2nd Match - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
  4. "Full Scorecard of India vs Sri Lanka, Sharjah Champions Trophy, Final - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_காம்ப்ளி&oldid=3879075" இலிருந்து மீள்விக்கப்பட்டது