வினோத் பாயானா
வினோத் பயானா (Vinod Bhayana) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் அரியானாவில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹான்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2019-இல் நடந்த தேர்தலில் 22,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரது முந்தைய பதவிக்காலத்தில், அரியானா அரசாங்கத்தில் சிறைகள், ஒழுங்கு மற்றும் சட்டம் மற்றும் மின்சாரத்துறையின் கீழ் தலைமை நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
தொகுபயானா தனது அரசியல் வாழ்க்கையை லோஹாரி ராகோவில் தொடங்கினார். அங்கு இவர் ஐந்து முறை கிராம ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை பாய் மகேஷ் சந்தர் பயானாவும் அங்கு கிராம ஊராட்சித் தலைவராக இருந்தார். வினோத் பயானா 2009-ஆம் ஆண்டில் [1] இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் இவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடும்பம்
தொகு1984-ஆம் ஆண்டில், பயானா சுனிதா பயனாவை மணந்தார். தம்பதியருக்கு அன்ஷுல் பயானா, சாஹில் பயானா மற்றும் சுப்ரியா நாக்பால் ஆகிய இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் ஹன்சியில் வசிக்கின்றனர். [2] [3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haryana: Five ex-legislators booked in change of land use scam". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/haryana-five-ex-legislators-booked-in-change-of-land-use-scam/articleshow/50783441.cms?from=mdr.
- ↑ Haryana Vidhan Sabha MLA
- ↑ My Neta
- ↑ Sitting and Previous MLAs from Hansi Assembly Constituency