வின்யசுவிங்கன் சண்டை

வின்யசுவிங்கன் சண்டை (Battle of Vinjesvingen) இரண்டாம் உலகப் போரின் போது நார்வேயில் நிகழ்ந்த ஒரு சண்டை. நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்றன. ஏப்ரல் 9, 1940ல் நார்வே மீது படையெடுத்த ஜெர்மானியர்கள் குறுகிய காலத்தில் தெற்கு நார்வே முழுவதையும் கைப்பற்றினர். நார்வீஜியப் படை தோற்கடிக்கப்பட்டு வடக்கு நோக்கி பின்வாங்கினாலும் சில இடங்களில் மட்டும் நார்வீஜிய தன்னார்வலர்கள் விடாது ஜெர்மானியர்களை எதிர்த்துப் போராடி வந்தனர். அவ்வாறு எதிர்ப்பு நிகழ்ந்த இடங்களுள் வின்யசுவிங்கனும் ஒன்று. மே முதல் வாரம் இங்கு இறுதி கட்ட மோதல்கள் நடைபெற்றன. இதற்குள் தெற்கு நார்வேயினை விட்டு நார்வீஜியப் படைகள் பின்வாங்கியிருந்ததால், இனிமேல் தங்கள் எதிர்ப்பு பலனளிக்காது என்பதை உணர்ந்த தன்னார்வலப் படையினர் ஜெர்மானியர்களிடம் சரணடைந்தனர்.

வின்யசுவிங்கன் சண்டை
நார்வே போர்த்தொடரின் பகுதி
நாள் மே 3-5, 1940
இடம் வின்யசுவிங்கன், நார்வே
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 நோர்வே  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
தார் ஓ. ஆன்னேவிக்
பலம்
~ 300 தன்னார்வலர் படையினர் ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்யசுவிங்கன்_சண்டை&oldid=1360042" இலிருந்து மீள்விக்கப்பட்டது