விப்லவ் தாகூர்

இந்திய அரசியல்வாதி

விப்லவ் தாகூர் (Viplove Thakur, பிறப்பு: அக்டோபர் 4, 1943) இமாசலப் பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்[1].இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.இவர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பிறந்தார்.இவரது தந்தை பரஸ் ராம், இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தவர் ஆவார்.இவரது தாயார் சர்லா சர்மா காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்தவர்.இவர் 1961ல் தாகூர் ஹர்னாம் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.1985 முதல் இமாச்சல் மாநில அளவிலும், மத்திய அளவிலும் பல முக்கிய பதவிகளை இவர் வகித்து வந்திருக்கிறார்.

விப்லவ் தாகூர்
மாநிலங்களவை  உறுப்பினர்
 இமாசலப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 அக்டோபர் 1943
அரசியல் கட்சிகாங்கிரசு
துணைவர்தாகூர் ஹர்னாம் சிங்
பிள்ளைகள்2
பெற்றோர்பரஸ் ராம் -சர்லா சர்மா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விப்லவ்_தாகூர்&oldid=3014469" இலிருந்து மீள்விக்கப்பட்டது