வியங்கோள் வினைமுற்று

தமிழ் இலக்கணத்தில், வியங்கோள் என்பது வியத்தை (அல்லது) ஏவுதலைக் குறிக்கும். வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.[1]

வியங்கோள் பொருள்கள்தொகு

வியங்கோள் வினை, நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாகும். இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • வெல்க, வாழ்க - வாழ்தல் பொருள்
  • வீழ்க, ஒழிக - வைதல் பொருள்
  • வருக, உண்க - விதித்தல் பொருள்
  • அருள்க, கருணைபுரிக - வேண்டல் பொருள்

வியங்கோள் வினைமுற்று விகுதிகள்தொகு

வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.

எடுத்துக்காட்டு:

  • வாழ்க, வாழிய, வாழியர்

மேற்கோள்கள்தொகு

  1. "பொதுத்தமிழ்". சுரா பதிப்பகம். 23 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.