வியட்நாமின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்
வியட்நாமின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும் என்பது, வியட்நாம் நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், அந்நாட்டின் அஞ்சல்சேவை வரலாறு, அதோடு தொடர்புடைய பிற அம்சங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. வியட்நாமின் அஞ்சல்தலைகள் பல்வேறு நாடுகளாலும், நிர்வாகங்களாலும் வெளியிடப்பட்டன. வியட்நாமுக்கெனச் சிறப்பாக வெளியிடப்பட்ட அஞ்சல்தலைகள் முதலில் 1945ல் வெளியாகின. முரண்பாடுகளாலும், பிரிவினையாலும் பாதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், ஒன்றுக்கொன்று எதிரான அரசுகள் அஞ்சல்தலைகளை வெளியிட்டன. 1976க்குப் பின்னர் ஒன்றுபட்ட வியட்நாமில் அஞ்சல் சேவையும் ஒன்றானது.
வியட்நாமிய அஞ்சல்தலைகளின் வருகை
தொகுவியட்நாமில் முதல் அஞ்சல்தலைகள் 1862ல் பிரான்சின் குடியேற்றவாத நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டது. அக்காலத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டவை "பொது பிரெஞ்சு குடியேற்றவாதத் தொடர்கள்" ஆகும்.[1] In the 1880s, some of these were overprinted locally for Cochinchina (1886–88), Annam and Tonkin (1888) and French Indochina (1889).[2] 1880ல் இவற்றுட் சில அஞ்சல்தலைகள், உள்ளூரில் மேலச்சு இடப்பட்டு கொச்சின்சைனா (1886–88), அன்னம் மற்றும் தொன்கின் (1888), பிரெஞ்சு இந்தோசீனா (1889) ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்படல்தலகள்டன. பின்னர், பிரெஞ்சு இந்தோசீனாவின் நீண்டகால அஞ்சல்தலைகள் (definitive stamps) வெளியாகின. பிரெஞ்சு இந்தோசீனா என்பது தற்கால வியட்நாம், கம்போடியா, லாவோசு ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது. வியட்நாமுக்கெனத் தனியான அஞ்சல்தலைகள் முதலில் வெளியானது 1945ல் ஆகும்.
சப்பானியர் பிரெஞ்சு இந்தோசீனாவைக் கைப்பற்றி வைத்திருந்த காலத்தில் (940-1945), குடியேற்றவாத நிர்வாகத்துக்கு பிரான்சிலிருந்து புதிதாக அஞ்சல்தலைகள் கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் அனோயில் இருந்த அச்சகம் ஒன்றில் சொந்தமாக அஞ்சல்தலைகளை அச்சிட்டனர். இந்த அஞ்சல் தலைகள் போருக்கு முந்திய அஞ்சல்தலைகளிலும் குறைவான தரம் கொண்டவை. அத்துடன் இதற்காகப் பயன்படுத்திய எந்திரங்களும், திருத்த முடியாதபடி பழுதடைந்தன.
வியட்நாமுக்கெனத் தனியான அஞ்சல்தலைகள், சப்பான் 1945ல் சரணடைந்த பின்னரே வெளியாகின. வியட்நாமில் சப்பான் சரணடைந்த நிகழ்வு, சப்பானுக்கு எதிரான வியட் மின் இயக்கம் உருவாகக் காரணமாயிற்று. இவ்வியக்கம், வியட்நாமின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றுவதற்கும், நாட்டின் அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்குமான கெரில்லா இயக்கத்துக்குத் தலைமை தாங்கியது. 1945-1946 காலப்பகுதியில், வியர் மின் அரசாங்கம் பெரும் எண்ணிக்கையிலான இடைக்கால அஞ்சல்தலைகளை வெளியிட்டது. இந்த அஞ்சல்தலைகள், ஏற்கெனவே கையிருப்பில் இருந்த பிரெஞ்சு இந்தோசீனாவின் போர்க்கால அஞ்சல்தலைகளில் மேலச்சு இட்டு வெளியிடப்பட்டன. பின்னர், ஹோ சி மின்னின் உருவம் பொறித்த நீண்டகால அஞ்சல்தலைகள் 1946ல் வெளியாகின.
திரும்பி வந்த பிரெஞ்சுப் படைகளுக்கும், வியட் மின் படைகளுக்கும் இடையில் ஏற்பட்ட போரினால், மேற்படி அஞ்சல்தலைகளின் பயன்பாடு முடிவுக்கு வந்தது. சண்டையின்போது பல்வேறு வியட் மின் கட்டுப்பாடுப் பகுதிகளில் அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன. அதேவேளை பிராசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், பிரெஞ்சு இந்தோசீனாவின் புதிய வெளியீடுகள் பயன்படுத்தப்பட்டன. 1950 அளவில், வியட்நாம், கம்போடியா, லாவோசு ஆகியவற்றுக்கான தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதிலடங்கிய ஒவ்வொரு நாடும் தமது பெயரில் தனியான அஞ்சல்தலைகளையும் நாணயங்களையும் வெளியிட்டன. வியட்நாமின் பாவோ டாய் அரசின் முதல் அஞ்சல்தலை 1951ல் வெளியிடப்பட்டது. இது பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த வியட்நாமில் பிரெஞ்சு இந்தோசீன அஞ்சல்தலைகளைப் பதிலீடு செய்தது.
1954ன் அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வியட்நாம், வடக்கு கிழக்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. உருவான இரு நாடுகளும் தனித்தனியாக அஞ்சல்தலைகளை வெளியிட்டன.
வடவியட்நாம்
தொகுவடவியட்நாமின் பல அஞ்சல்தலைகள் அனோயில் அச்சிடப்பட்டன.[3] ஏனையவை, வெளிநாடுகளில், எடுத்துக்காட்டாக சொக்கோசிலவாக்கியாவின் பிராக் நகர்,[4] அங்கேரியின் புடாபெஸ்ட் நகர்[5] ஆகிய இடங்களில் அச்சிடப்பட்டன.
தென்வியட்நாம்
தொகுதென்வியட்நாமின் அஞ்சல்தலைகள், 1954-1967 காலப்பகுதியில் பாரிசு, டோக்கியோ, இங்கிலாந்து, ரோம் ஆகிய இடங்களிலும்,[6] 1967-1973 காலப்பகுதியில் சப்பானிலும்,[7] 1973-1975 காலப்பகுதியில் இங்கிலாந்திலும் அச்சிடப்பட்டன.[8] படைத்துறையினரால் பயன்படுத்தப்பட்ட அஞ்சல்தலைகள் உள்ளூரில் அச்சிடப்பட்டன. இவை தரம் குறைந்தவையாக இருந்தன.
1963க்கும் 1976க்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத இயக்கமான தென்வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி (என்.எல்.எஃப் அல்லது வியட் கொங்) தமது சொந்த அஞ்சல்தலைகளை வெளியிட்டன. இவை அனோயில் அச்சிடப்பட்டவை.[9] மே 1975ல் வியட்நாம் குடியரசு அரசாங்கம் கவிழ்ந்த பின்னர், என்.எல்.எஃப் மட்டுமே முழுத் தென்வியட்நாமுக்கும் அஞ்சல்தலைகளை வெளியிட்டது. இது ஓராண்டுக்குப் பின்னர் வியட்நாம் ஒருங்கிணைக்கப்படும்வரை நீடித்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Yvert & Tellier (1973), p. 198.
- ↑ Yvert & Tellier (1973), pps. 198, 160 and 289.
- ↑ Stanley Gibbons (1995), p. 381.
- ↑ Stanley Gibbons (1995), pps. 384-385.
- ↑ Stanley Gibbons (1995), p. 389ff.
- ↑ Stanley Gibbons (1995), p. 360-369 (see especially p. 363). Others were printed by the American Bank Note Co. (1956) and in Munich (1957).
- ↑ Stanley Gibbons (1995), p. 369-374. Others were printed in Paris (1967 (and 1970?)) and Rome (1969).
- ↑ Stanley Gibbons (1995), p. 374-377. Others were printed in Saigon (1975).
- ↑ Stanley Gibbons (1995), p. 377.