வியட்நாமியக் குடும்பம்

மரபாக, வியட்நாமியக் குடும்பம் (Vietnamese family) (வியட்நாம் மொழியில்: கியா தின் (gia đình) அல்லது நிகா (nhà)) ஒன்றின் தலைவர் கணவரே அமைவார்; இவர் கியா துரூவோங் (gia trưởng) எனப்படுவார். ஒரே கால்வழியைச் சார்ந்த பல குடும்பங்கள் "குருதிவழியினர் "( "line of the blood") அல்லது இனக்குழுவினர் ஆவர்; இவர்கள் வியட்நாமிய மொழியில் தாய் கியா தின் (đại gia đình) அல்லது கியா தோசு (gia tộc) அல்லது கோ (họ) எனப்படுவர். இந்தக் குருதிவழியினரின் தலைவர் அக்குருதிவழியில் அமையும் மிக உயர்ந்த சமூக மட்டத்தில் உள்ளவர் ஆவார்; இவர் தோசு துரூவோங் (tộc trưởng) அல்லது இனக்குழுத் தலைவர் எனப்படுவார். வியட்நாமியரின் படைப்புத் தொன்மத்தின்படி, அனைத்து வியட்நாமியரும் இரு மூதாதைகளில் இருந்து, அதாவது இலாசு உலோங்குவான் (Lạc Long Quân) ஆவு சோ (Âu Cơ) ஆகிய இருவரின் கால்வழியில் இருந்து தோன்றியவர்களே ஆவர்.

சுற்ற முறை (உறவின் முறை) தொகு

வியட்நாமிய மொழியில் ஒன்பது தலைமுறைகளைக் குறிக்கும் சொற்கள் உள்ளன. தலைமுறை எனும் சொல் வியட்நாமிய மொழியில், தேகே (thế hệ) அல்லது தோய் (đời)) எனப்படுகிறது:

கி (கியோங்/கிபா) (Kỵ (Kỵ ông/ Kỵ bà)) : என் பூட்டனின் பெற்றோர் (my great-grandparents' parents) (என் பூட்டனின் அப்பா/அம்மா)

சு (சுயோங்/சுபா) (Cụ (Cụ ông/ Cụ bà)) : என் பூட்டன்/பூட்டி)

ஓங்பா (Ông bà) : என் பாட்டன் அல்லது பாட்டி

சாமே (Cha Mẹ) : என் பெற்றோர் (அப்பா/அம்மா)

தா/தோய் (Ta/Tôi) : I

சோன் (சோன் திராய்/சோன் காய்) (Con (Con trai/Con gái)) : என் குழந்தைகள் (என் மகன்/என் மகள்)

சாவு (சாவு திராய்/சாவு காய்) (Cháu (Cháu trai/Cháu gái)) :என் பேரன்/என் பேத்தி

சாத் (சாத் திராய்/சாத் காய்) (Chắt (Chắt trai/chắt gái)): என் கொள்ளுப் பேரன்/என் கொள்ளுப் பேத்தி

சூத் (அல்லது சித்)(சூத் திராய்/சூத் காய்) (Chút trai/Chút gái):என் கொள்ளுப் பவுரன்/என் கொள்ளுப் பவுத்தி

வழக்கமாக கூட்டுக் குடும்பத்தில் மூன்று தலைமுறைகள் வாழும்; இது தாம் தாய் தோங் துவோங் (tam đại đồng đường).

கிடைநிலையில், ஒரே பெற்றோருக்குப் பிறந்த அண்ணன்தம்பிகள்/அக்காதங்கைகள் ஆன் சி எம்ருவோத் (anh chị em ruột) எனப்படுவர்; ஒரே பாட்டன்பாட்டிகளின் உடன்பிறப்புகள் ஆன் சியேம் சி எம்கோ (anh chị em họ) எனப்படுவர். த்த்தெடுத்த அண்ணன்தம்பிகள்/அக்காதங்கைகள் 'ஆன்சி எம்நுவோய் ('anh chị em nuôi) எனப்படுவர். ஒரே தந்தைக்கும் வேறு தாயருக்கும் பிறந்த ஒருபால் அண்ணன்தம்பிகள்/ஒருபால் அக்காத்ங்கைகள் 'ஆன் சி எம் தி பாவோ ('anh chị em dị bào) எனப்படுவர்; ஒரே தாய்க்கும் வேறு தந்தையருக்கும் பிறந்த ஒருபால் அண்ணன்தம்பிகள்/ஒருபால் அக்காதங்கைகள் ஆன் சி எம் தோங் மாவு தி பூ (anh chị em đồng mẫu dị phụ) எனப்படுவர். அக்காதங்கைகளின் கணவர்கள் ஆன்/என்ரே (anh/em rể) எனவும் அண்ணன் தம்பிகளின் மனைவியர் சி எம் தாவு (chị/em dâu) எனவும் அழைக்கப்படுவர். கனவனின் அண்ணன் தம்பிகளும்/அக்கா தங்கைகளும் ஆன் சி எம் சோங் (anh chị em chồng) எனவும் மனைவியின் அண்ணன் தம்பிகளும்/அக்கா தங்கைகளும் ஆன் சி எம்வோ (anh chị em vợ) எனவும் அழைக்கப்படுவர். அக்கா தங்கைகளை மனவியாகக் கொண்ட இரு ஆடவர் ஆன் எம் சோசு சேவோ (anh em cọc chèo)எனவும் அண்ணன் தம்பிகளை கணவராகக் கொண்ட இரு மகளிர் சி எம் தாவு (chị em dâu) எனவும் அழைக்கப்படுவர்.

பெற்றோர் தொகு

வியட்நாமியருக்கு மூவகைத் தந்தையரும் (தாம்பூ)(tam phụ) எட்டுவகைத் தாயார்களும் (பாத் மாவு(bát mẫu)) உண்டு.

  • தாம்பூக்கள் பின்வருமாறு:

தான் பூ (Thân phụ): எம் குருதிவழித் தந்தை.

கியா பூ (Giá phụ) அல்லது சா துவோங் (cha dượng) அல்லது சா கே (cha ghẻ): எம் தாயின் அண்மைக் கணவர்

துவோங் பூ (Dưỡng phụ): எம் தத்தெடுத்த தந்தை.


  • பாத் மாவுகள் பின்வருமாறு:

திச் மாவு (Đích mẫu): எம் தந்தையின் முதல் மனைவி.

கே மாவு (Kế mẫu): முதல் மனைவி இறந்ததும் தந்தைக்கு அடுத்து மனைவியாகும் தாய்.

துவோங் மாவு (Dưỡng mẫu): குடும்பம் சாராமல் தத்தெடுத்த தாய்.

தூ மாவு (Từ mẫu): குடும்பம் சார்ந்து தத்தெடுத்த தாய்.

து மாவு (Thứ mẫu): முதல் மனைவியல்லாத குருதிவழித் தாய்.

கியா மாவு (Giá mẫu): குருதிவழித் தந்தை இறந்தபின் வேறொருவரை மறுமணம் செய்துகொண்ட குருதித் தாய்.

சுவாத் மாவு (Xuất mẫu): குருதித் தந்தையை மணவிலக்கு செய்த குருதித் தாய்.

நூ மாவு (Nhũ mẫu): எம் செவிலித் தாய்


சிறுவர் தமது பெற்றோரின் கட்டளைகளையும் கட்டுபாடுகளையும் ஏற்று நடக்கவேண்டும். இந்நெறிமுறைதவோ கியேவு (đạo hiếu) எனப்படுகிறது.

திருமணம் தொகு

மேலும் காண்க, மரபு வியட்நாமியத் திருமணம்

திருமண உறுதித் தாம்பூலச் சடங்கு, திருமணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே நடத்தப்படுகிறது. முன்பெல்லாம், பெரும்பாலான திருமணங்கள் (வியட்நாமிய மொழியில்: கோன் நிகான் (hôn nhân) பெற்றோரால் அல்லது கூட்டுக் குடும்பத்தால் உறுதிசெய்து நடத்தப்பட்டன. சிலவேளைகளில் மணமக்களோடும் கலந்துரையாடி முடிவு செய்வதும் உண்டு; என்றாலும், பெரும்பாலும் பெற்றோரின் முடிவே இறுதியானது. உறுதி தாம்பூலத்தின்போது மணமகனும் மணமகளும் முதல் முறை சந்திப்பதும் உண்டு. இருந்தாலும் கடந்த சில பத்தாண்டுகளாக காதல் திருமணங்கள் பேரளவில் நடைபெறுகின்றன.

பெயர் தொகு

வியட்நாமியரின் பெயர் மூன்று பகுதிகளால் ஆனது. அவை, கோ (họ), தேந்தேம் (tên đệm), and தேங்கோய் (tên gọi) என்பனவாகும்.

கோ என்பது தனியரின் குருதிவழிப் பெயர் ஆல்லது குடும்பவழிப் பெயர்.

தேந்தேம் என்பது அவரது நடுப்பெயர் ஆகும்.

'தேன் என்பது அவருக்கு இட்ட பெயராகும்.

தனியரின் சுட்டுபெயர் தொகு

வியட்நாமியர் சார்ந்த தனி ஒருவரை அழைக்கும் சுட்டுபெயர், குடும்பங்களில் பேசுவோர்/ கேட்போரின் குடும்ப உறவுநிலையைச் சார்ந்து அமையும்.

வீடு தொகு

வியட்நாமியக் கருநிலைக் குடும்பம் ஒரே வீட்டில் கூடிவாழ்கிறது.பெற்றோர் இசைவிலாமல் மணமாகிய முதிரிளைஞர்கள் தனிக்குடும்பம் நடத்தவியலாது எனவே, வியட்நாம் மொழியில் வீடு எனும் சொல்லுக்கு குடும்பம் என்ற பொருளும் உண்டு.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  • Vietnamese book: "Nếp cũ- Trong họ ngoài làng- Ta về ta tắm ao ta- Phong tục xưa đối với phụ nữ Việt Nam' (Author: Toan Ánh).
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாமியக்_குடும்பம்&oldid=2908609" இலிருந்து மீள்விக்கப்பட்டது