விரிச்சியூர் நன்னாகனார்

விரிச்சியூர் நன்னாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 292 எண் கொண்ட பாடல். (திணை - வஞ்சி, துறை - பெருஞ்சோற்றுநிலை)

அது சொல்லும் செய்தி

தொகு

போருக்குச் செல்வதற்கு ஊக்கம் தரும் வகையில் வெருஞ்சோற்று விருந்து வடைவீரர்களுக்கு அளிக்கப்படும். அப்போது நறவக் கள்ளும் வழங்கப்படும். போருக்குச் செல்லும் வேந்தனுக்கும் நறவம் வழங்கப்பட்டது. அதனை அவன் மற்றவர்களுக்கும் ஊற்றித் தந்தான். வீரன் ஒருவனுக்கும் நறவத்தை அரசன் ஊற்ற வந்தான். அப்போது அரசன் அவனை இன்ன நாளில் போருக்குச் செல்லவேண்டும் என முறை வமுத்துக் கொடுத்தான். அந்த முறைநாள் அவனுக்குப் பிடிக்கவிலை. அன்றே போருக்குச் செல்ல விரும்பினான். அதனால் அரசன் தந்த நறவத்தை வாங்க மறுத்துவிட்டான். எண்ணியது போலவே அன்றே போருக்குச் சென்று பகைவர் படையை முறியடித்தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிச்சியூர்_நன்னாகனார்&oldid=711161" இலிருந்து மீள்விக்கப்பட்டது