விருத்தாச்சலம் வட்டம்

விருத்தாச்சலம் வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக விருத்தாச்சலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 124 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2]

2014-இல் விருத்தாச்சலம் வட்டத்தில் சில பகுதிகளைக் கொண்டு வேப்பூர் வட்டம் நிறுவப்பட்டது.

இவ்வட்டத்தில் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 426,592 ஆகும். அதில் 216,699 ஆண்களும், 209,893 பெண்களும் உள்ளனர். 105,142 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 77.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 75.51% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 969பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 47856 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 867 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 132,645 மற்றும் 2,813 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.11% , இசுலாமியர்கள் 4.12%, கிறித்தவர்கள் 3.6% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருத்தாச்சலம்_வட்டம்&oldid=2728886" இலிருந்து மீள்விக்கப்பட்டது