விரைவு வீச்சு

விரைவு வீச்சு (Fast bowling), சில நேரங்களில் வேகப் பந்து வீச்சு (pace bowling), துடுப்பாட்ட விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து வீச்சு வகைகளில் ஒன்றாகும். பந்துவீச்சின் முதன்மையான இருபிரிவுகளில் சுழற்பந்து வீச்சினைத் தவிர்த்த மற்றொரு வகையாகும். இவ்வகை பந்து வீச்சாளர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் , விரைவுக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். விரைவுப் பந்து வீச்சின் வீசுநுட்பத்தை ஒட்டி அலைவுறு வீச்சாளர் என்றும் தையற்தட வீச்சாளர் என்றும் வகைப்படுத்துவதுண்டு.

விரைவு வீச்சின் நோக்கம் பந்தை வெகுவேகமாக துடுப்பாட்டக் களத்தில் எறிந்து அது எழும்புகின்ற விதத்தை கணிக்க முடியாதவாறும் அல்லது காற்றில் நேர்கோட்டிலிருந்து ஏதாவதொருபுறம் விலகுமாறும் செய்து மட்டையாளர் அடிக்கவியலாதபடி திண்டாட வைப்பதாகும். ஓர் வேகப்பந்து சராசரியாக மணிக்கு 136 to 150 கிமீ(85 to 95 mph) வேகத்தில் வீசப்படுகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அலுவல்முறையல்லாத மிகவேகமான பந்துவீச்சு இந்தியாவிற்கு எதிராக பாக்கித்தானின் மொகமது சமி 101.9 mph (164.0 km/h) வேகத்தில் வீசியது ஆகும்.[1] அலுவல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள மிகவேகமான பந்துவீச்சு 161.3 கிமீ/ம(100.2 mph) வேகத்தில் பாக்கித்தானின் சோயிப் அக்தர் 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியொன்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வீசியதாகும்.[2]

விரைவு வீச்சு பகுப்புகள் தொகு

இளவயதில் விரைவாகப் பந்து வீசுவதிலேயே கவனம் செலுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் முதிர்ந்த நிலையில் பல வீசுநுட்பங்களில் தேர்ந்து அலைவுறு பந்துவீச்சிலோ தையற்தட பந்துவீச்சிலோ சிறந்து விளங்குகின்றனர். இதனைப் பொறுத்து அவர்கள் தாக்கு, அலைவுறு, தையற்தட பந்துவீச்சாளர் என வகைப்படுத்தப்படுகின்றனர். ஓர் வேகப்பந்து வீச்சாளர் மூன்றுவகை நுட்பங்களையும் தமது ஆட்டத்தில் நிலைமைக்குத் தக்கவாறு கலந்து வீசுவார் என்பதால் இவை சரியான வகைப்படுத்தல் அல்ல.

 
பிரெட் லீ 2005ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு எதிராக மேற்கு ஆத்திரேலிய அரங்கில் பந்துவீசல்.

பதிலாக, பந்துவீச்சாளரின் சராசரி பந்து வீச்சு வேகங்களைக் கொண்டு வகைப்படுத்துவது பொதுவான செயலாக உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களின் வகைப்படுத்தல்
வகை மணிக்கு மைல்கள் மணிக்கு கி.மீ
விரைவு 86 + 138 +
விரைவு-மிதம் 80 to 85 130 to 137
மிதவிரைவு 75 to 80 121 to 130
மிதவேகம் 70 to 75 114 to 121

மேற்கோள்கள் தொகு

  1. http://www.youtube.com/watch?v=cLMnVuRsg80&feature=related
  2. Selvey, Mike (2010-07-07). "Shaun Tait is certainly very fast, but 100mph?". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 2010-07-09. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

உசாத்துணைகள் தொகு

  • Hughes, Simon (2002), Jargonbusting: The Analyst's Guide to Test Cricket, Channel 4 books, ISBN 0-7522-6508-3
  • Lewis, Tony (Editor) (1995), MCC Masterclass, Weidenfeld & Nicolson, ISBN 0-297-81578-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரைவு_வீச்சு&oldid=2873490" இலிருந்து மீள்விக்கப்பட்டது