விரை வீக்கம்

விரை வீக்கம் (hydrocele / hydrocoele) என்பது ஆண்களின் விரையைச் (Testicle) சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் அளவுக்கதிகமாக நீர் சுரப்பதால் விரை வீக்கம் உண்டாகிறது. சிலருக்கு இந்தச் சுரப்பு நீர் சாதாரண அளவில் சுரந்தாலும், சுரப்பு நீர் உடலுக்குள் திரும்பிச் செல்கிற நிணநீர்ப் பாதையை அடைத்துக் கொள்வதால் விரை வீக்கம் உண்டாகிறது. யானைக்கால் நோய் (Filariasis) நோயினால் கூட விரை வீக்கம் ஏற்படுவதுண்டு.

விரையின் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலோ வீக்கங்கள் காணப்படுவது இதன் அறிகுறியாகும்.

அறுவை மருத்துவத்தாலும் விரை வீக்கத்தை குணப்படுத்த இயலும். மருந்து மாத்திரைகளால் விரை வீக்கத்தை குணப்படுத்த இயலாது. விரை வீக்கம் பரம்பரை நோயன்று.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Hydrocele
  2. Hydrocele – Topic Overview
  3. Hydrocele

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரை_வீக்கம்&oldid=3665846" இலிருந்து மீள்விக்கப்பட்டது