விலாங்கூகைட்டு
பாசுப்பேட்டு கனிமம்
விலாங்கூகைட்டு (Wilancookite) என்பது (Ba,K,Na)8(Ba,Li,[ ])6Be24P24O96·32H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். பெரிலியம் பாசுப்பேட்டு அணைவுச் சேர்மமான இக்கனிமம் மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடிய கனிமமாகும். பிரேசில் நாட்டிலுள்ள மினாசு கிரேய்சு மாநிலத்தின் இயெக்விடிங்கோங்கா நகராட்சியில் விலாங்கூகைட்டு முதன் முதலில் கண்டறியப்பட்டது.[1][2]
விலாங்கூகைட்டு Wilancookite | |
---|---|
பிரேசில் நாட்டின் மினாசு கிரேய்சு மாநிலத்தின் இயெக்விடிங்கோங்கா நகராட்சியில் கிடைத்த விலாங்கூகைட்டு கனிமம் | |
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டு |
வேதி வாய்பாடு | (Ba,K,Na)8(Ba,Li,[ ])6Be24P24O96·32H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மேற்கோள்கள் | [1] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் விலாங்கூகைட்டு Wck[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது
தொடர்புடைய கனிமங்கள்
தொகுவிலாங்கூகைட்டு பகாசபைட்டு என்ற இலித்தியம் கொண்டுள்ள பெரிலியம் பாசுப்பேட்டு கனிமத்துடன் தொடர்புடையதாக உள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Menezes Filho, L.A.D., Hatert, F., Philippo, S., Ottolini, L., Dal Bo, F., Scholz, R., Chaves, M.L.S.C., Yang, H., and Downs, R.T., 2015. Wilancookite, IMA 2015-034. CNMNC Newsletter No. 27, October 2015, 1228; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ "Wilancookite: Wilancookite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Pahasapaite: Pahasapaite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.