வில்சன் ரூபின் அபோர்ட்
வில்சன் ரூபீன் அபோர்ட் (Wilson Ruffin Abbott, 1801–1876) என்பவர் ஆப்ரிக்க கனடிய பெற்றோருக்குப் பிறந்த அமெரிக்கர் ஆவார். இவர் ஒரு வெற்றிகரமான வியாபாரி மற்றும் நில பெருநில உரிமையாளர் ஆவார். கனடாவில் மருத்துவராக பணியாற்றிய முதற் ஆப்பிரிக்கரான ஆண்டர்சன் ரூபின் அபோர்ட்டின் தந்தை ஆவார்.
இவர் ஸ்காட்ச்-அயர்லாந்தை சேர்ந்த தந்தைக்கும் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர். அபோர்ட் அவர்கள் மிசிசிப்பி ஆற்றில் தன்னுடைய 15 ஆவது வயதில் நீராவிக் கப்பலில் பணியாற்றினார்.[1]
இவர் ஹேலன் டாய்ரை மணந்தார். திருமணத்திற்கு பிறகு ஆலபாமா என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு பலசரக்கு மளிகை கடையைத் தொடங்கினார். ஆனால் 1834 இல் தன்னுடைய கடையில் பொருட்களின் மீது விலை ஏற்றி கொள்ளையடிப்பதாக எச்சரிக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறினார். 1835 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அல்லது 1836 முற்பகுதியில் கனடாவில் உள்ள டொராண்டோவிற்கு இடம் பெயர்ந்தார்.மேலும் அங்கு வியாபாரியாக பிரகாசித்தார்.
ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்ட ஆண்டர்சன் ரூபீன் அபோர்ட் கனடாவின் மருத்துவராக பணியாற்றியவர் இவரது மகன் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Winks, Robin W. (1972). "Wilson Ruffin Abbott". Dictionary of Canadian Biography, Vol. X. Toronto. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8020-3287-7.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help)CS1 maint: location missing publisher (link)