வில்சன் - பாப்பு விளைவு
விண்மீன்களுக்கு இடையேயான விண்ணிடைத் தொலைவுகளை அளவிட உதவும் ஒரு கருவியாக விளங்குகின்றது வில்சன் - பாப்பு விளைவு (Wilson-Bappu effect)[1]. கால்சியம் Ca II - K (உமிழ்வு) வரியின் அகலத்திற்கும் பின்வகை விண்மீனின் (G,K,M-வகை விண்மீன்) தோற்றத் தனியொளி அளவிற்கும் (absolute visual magnitude) இடையேயான தொடர்பை ஓலின் வில்சன், மற்றும் வைணு பாப்பு ஆகிய இருவரும் நிறுவியுள்ளனர்[2].