வில்பர் சற்குணராஜ்
வில்பர் சற்குணராஜ் (Wilbur Sargunaraj) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர் ஆவார். இவரது காணொளிகள், யூடியூபில் கிட்டத்தட்ட 3.1 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளன[1] . இவருடைய "லவ் மேரேஜ்" ஒளிப்பாடல் யூடியூபில் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது.
வாழ்க்கை
தொகுஅவரது தந்தை திருநெல்வேலி மாவட்டத்தையும் மற்றும் அவரது தாயார் மதுரை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். அவரது குடும்பம் மதுரை நகரம் வருவதற்கு முன் தனது இளமை பருவத்தில் டார்ஜிலிங், கல்கத்தா, பனராஸ் மற்றும் ஊட்டி போன்ற இடங்களில் இருந்துள்ளார். அவர் லாங் ஐலேண்ட் டிரம்மர், டோம் பாமுலரோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மோதுகை அலெக்ஸ் அகுணா போன்ற அமெரிக்க டிரம்மர்களிடம் தனிப்பட்ட முறையில் பயின்றவறாவர்.