வில்பிரெடு சுபென்சர் இலெங்கு
வில்பிரெடு சுபென்செர் இலெங்கு (Wilfrid Spencer Leng) (21 அக்தோபர் 1952 – 30 ஆகத்து 2002)ஒரு பிரித்தானியக் கணிதவியலாளரும் வானியலாளரும் எழுத்தாளரும் ஆவார் .இவர் அய்ன்சுட்டைனின் சார்பியல் கோட்பாட்டையும் குவைய இயக்கவியலையும் இணைத்து எழுதிய அனைத்துக்குமான கோட்பாடு எனும் நூலூக்குப் பங்களிப்பு செய்துள்ளார்.
இலெங்கு 1952 இல் கிராய்தோனில் பிற்ந்தார். இவர் இலண்டனில் உள்ள துல்விச் கல்லூரியிலும் பிறகு கேம்பிரிட்ஜ் மகதலேனா கல்லூரியிலும் படித்தார் .[1]இவர் சிறிது காலம் மில்பீல்டு பள்ளியில் கல்வி கற்பித்துள்ளார். இவர் 1983 இல் Sing England to Italy எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் பிரித்தானியக் கவிவாணராகிய ஜான் பெத்தீமனல் ஆழமான அழகு ததும்பும் கவிதைகளாகப் பாராட்டப்பட்டுள்ளன.[2] இலெங்கு படைப்பிலக்கியங்களைக் கற்பித்துள்ளார்.[1][3]இவர் சிறந்த கல்வியாளராக மெய்யியல், அண்டவியல், அறிவியல், வரலாறு என பலபுலங்களில் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இவர் ஆண்டுதோறும் கிராய்தோன் கல்லூரியில் அய்ன்சுட்டைன் உரைகளையும் ஆற்றியுள்ளார்.என்றாலும் இவரது முழுமையான ஈடுபாடு கணித் இயற்பியலில் பொதிந்திருந்தது. இவர் 1990 களில் கணிதவியல் கருத்தரங்குகளில் பல ஆய்வுகளைப் படித்துள்ளார். இவர் 1999 இல் அனைத்துக்குமான கோட்பாட்டுச் சமன்பாடு எனும் நூலை இயற்றினார். இந்நூலில் " அனைத்தும் பல்லண்டத்தில் தோன்றி அதோடு இணைந்துறவாடிப் பல புள்ளிகளை உருவாக்க, ஒவ்வொரு புள்ளியும் மறுபடியும் ஓர் அண்டத்தைத் தோற்றுவிக்கிறது".[1]
இலெங்கு இலண்டனில் 2002 இல் நோயால் இறந்தார்.[4] இவர் கணிதவியல் கருத்தரங்கு ஒன்றுக்குப் பீக்கிங் சென்றபோது தான் இந்நோய்வாய்பட்டுள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Schuler, CJ (September 30, 2002). "Obituary". The Independent இம் மூலத்தில் இருந்து ஜனவரி 25, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125091109/http://www.highbeam.com/doc/1P2-1712747.html. பார்த்த நாள்: August 22, 2012.
- ↑ Leng, Wilfrid (1983). Sing England to Italy. Greenway Press. pp. Back cover. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0950812540.
- ↑ Lindsay, Andrew (2005). The Washing Machine Man's Travels. Greenworldbooks. p. 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0955008306.
- ↑ "Wilfrid Leng". London Mathematical Society Newsletter. November 5, 2002. http://old.lms.ac.uk/newsletter/0210/obituaries.html. பார்த்த நாள்: August 22, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]