வில்லியம் ஆடம் (மெல்லுடலி ஆராய்ச்சியாளர்)

வில்லியம் ஆடம் (William Adam, 27 சனவரி 1909, டென் ஹாக், 3 நவம்பர் 1988, பிரசெல்சு) இடச்சு/பெல்ஜிய மெல்லுடலி ஆய்வாளர் ஆவார்.[1] மெல்லுடலிகளில் இவர் தலைக்காலிகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஆடம் பல்வேறு வகையான கணவாய் மீன்கள், பாப்டெய்ல் ஸ்குட்களை விவரித்துள்ளார். இவற்றில் யுப்ரிம்னா ஹொயெலி (Euprymna hoyle) செபியா காட்டனி (Sepia cottoni), செபியா டோல்பூசி [Sepia dollfusi), செபியா டுபியா (Sepia dubia)', செபியா ரெசி (Sepia reesi), செபியா சிவெலி (Sepia sewelli), செபியா திரஸ்டோனி (Sepia thurstoni), செபியா வெர்கொய் (Sepia vercoi), செபியா குன்ட்செனி (Sepiola knudseni) குறிப்பிடத்தக்கன.

ஆடம் கான்ஸ்டன்ஸ் ஜீனெட் பார்குயிஜென் மற்றும் வணிக மாலுமியான வில்லியம் ஆடம் ஆகியோரின் மகனாக டென் ஹாக் நகரில் பிறந்தார். அங்கேயே கல்வி கற்றபின் 1926-27ல் சிறிது காலம் ஜாவாவிற்குச் சென்றார். ஜாவாவிலிருந்து தாயகம் திரும்பியபின் வுட்ரெச்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கற்று 1933ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். இவர் தனது முனைவர் பட்ட ஆய்வினை நிலத்தில் வாழும் மெல்லுடலிகளின் சுரப்பிகளில் மேற்கொண்டார். பின்னர் பிரசல்சில் உள்ள இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தில் பணியில் சேர்ந்து பலபணி நிலைகளுக்கு முன்னேறினார். 1952ஆம் ஆண்டில் பெல்ஜியக் குடிமகனானார்.[2] 1957ஆம் ஆண்டு நெதர்லாந்து ராயல் கலை அறிவியல் அகடமியின் தாளாளராகப் பொறுப்பேற்றார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. van Goethem, J.L. 1989. In memoriam: William Adam, 1909–1988. Basteria 53(1–3): 25–27.
  2. Brongersma, L.D. (1988) William Adam In: Levensberichten en herdenkingen. Koninklijke Nederlandse Akademie van Wetenschappen. pp. 115-116.
  3. "William Adam (1909 - 1988)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.