வில்லியம் கிர்பி

வில்லியம் கிர்பி ஒரு பூச்சியியலாளர் ஆவார். ஆங்கிலேயரான இவர் லின்னியக் கழகத்தின் தொடக்க உறுப்பினரும் அரச கழகத்தின் மூத்த உறுப்பினரும் ஆவார். இவரே பூச்சியியல் துறையைத் தொடங்கி வைத்தவர் எனக் கருதப்படுகிறது.

தோற்றமும் இளமைக்காலமும்

தொகு

இவர் நிலவுருவவியலாளரான ஜான் கிர்பி என்பவருடைய பேரனும், ஓவியரும் நிலவுருவவியலாளருமான ஜோசுவா கிர்பியின் மருமகனும் பெறா மகனும் ஆவார். சிறுவர்களுக்கான நூலாசிரியர் திருமதி சாரா டிரிம்மர் இவருக்கு ஒன்றுவிட்ட சகோதரி. இவரது தந்தை ஒரு வழக்குரைஞர். கிர்பி சஃபோக்கின் விட்னசாம் என்னும் இடத்தில் பிறந்தார். இப்சுவிச் பள்ளியிலும், கேம்பிரிட்சிலுள்ள கையசுக் கல்லூரியிலும் பயின்று 1781 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கிர்பி&oldid=2707220" இலிருந்து மீள்விக்கப்பட்டது