வில்லியம் குரூக்

இங்கிலாந்தைச் சேர்ந்த நாட்டுப்புறவியலாளர்

வில்லியம் குரூக் (William Crooke) (6 ஆகஸ்ட் 1848 - 25 அக்டோபர் 1923) ஒரு பிரித்தனைச் சேர்ந்த கிழகத்திய ஆய்வாளரும், ஆங்கிலோ-இந்திய நாட்டுப்புறவியல் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தலில் முக்கிய நபராகவும் இருந்தார்.

சுயசரிதை

தொகு

குரூக், அயர்லாந்தின் கவுண்டி கார்க்கில் பிறந்தார். மேலும் எராஸ்மஸ் இசுமித்தின் டிப்பரரி இலக்கணப் பள்ளி மற்றும் டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் கல்வி பயின்றார். குரூக் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார். இந்தியாவில் ஒரு நிர்வாகியாக இருந்தபோது, நாட்டின் பழங்கால நாகரிகங்களில் தனது ஆராய்ச்சிகளுக்கு ஏராளமான பொருட்களைக் கண்டார். இந்திய மக்கள், அவர்களின் மதங்கள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி நிறைய எழுத ஆரம்பித்தார். இவர் ஒரு திறமையான வேட்டைக்காரரும் கூட.[1]

குரூக் ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தபோதிலும், தனது மேலதிகாரிகளுடன் ஆளுமை மோதல்கள் காரணமாக இந்தியக் குடிமைப் பணியில் இவரது தொழில் வாழ்க்கை 25 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னர் இங்கிலாந்து திரும்பினார். 1910 இல், பிரித்தானிய சங்கத்தின் மானுடவியல் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில், நாட்டுப்புறாக் கழகத்தில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து, அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] அடுத்த ஆண்டில் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] பின்னர் 1915 இல் போக்-லோர் என்ற அதன் என்ற இதழின் ஆசிரியரானார். 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி குளோசெஸ்டர்சையரில் உள்ள செல்டென்காமில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தான் இறக்கும் வரை தங்கியிருந்தார்.[4]

ஆக்ஸ்போர்டு மற்றும் டப்ளின் பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் மற்றும் பிரித்தானிய அகாதமியின் சகா உட்பட, பிற்கால வாழ்க்கையில் குரூக் பல்வேறு மரியாதைகளைப் பெற்றார்.

இந்தியாவில் இருக்கும் போது இனவியல்

தொகு

1857 கிளர்ச்சிக்குப் பின், டெம்பிள் போன்ற இந்திய குடிமைப் பணி உறுப்பினர்கள், எதிர்காலத்தில் இதேபோன்ற நிகழ்வு தவிர்க்கப்பட வேண்டுமென்றால், அவர்களின் காலனித்துவ குடிமக்கள் மற்றும் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய சிறந்த புரிதலைப் பெறுவது அவசியம் என்று நம்பினர். குரூக் அத்தகைய செயலில் ஈடுபட்டார்.[5] இதில் கற்ற பாடங்களை தனது உத்தியோகத்தில் செலுத்தினார்.[6]

குரூக் இந்த துறையில் இனவியலாளராக கருதப்பட்டார். இது 1890 ஆம் ஆண்டில் [a]பர்மாவிற்குச் சென்ற டெம்பிள் மூலம் முன்னர் திருத்தப்பட்ட ஒரு பத்திரிகையை அவர் பொறுப்பேற்றபோது தொடங்கியது. அடுத்த ஆறு ஆண்டுகளில், இனவரைவியல் துறையில் குரூக்கின் வெளியீடு கணிசமானதாக இருந்தது. பிரபலமான மதம் மற்றும் நாட்டுப்புறவியல் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பழங்குடிகள் மற்றும் சாதிகளை உருவாக்கும் நான்கு தொகுதிகள் என இதழில் இரண்டு தொகுதிகளை வெளியிட்டார். கூடுதலாக, இவர் மற்றவர்களால் வெளியிடப்பட்ட பத்திரிகைகளுக்கும் தொடர்ந்து பங்களித்தார் [8]

குறிப்புகள்

தொகு
  1. There are inconsistencies regarding the date. Rose says that the editorship of Notes and Queries began in 1890,[4] while Naithani says the same in her work of 2006[6] but had previously said it began in 1887 when Temple took on the editorship of Indian Antiquary.[7]

'சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_குரூக்&oldid=3925722" இலிருந்து மீள்விக்கப்பட்டது