வில்லியம் பார்சன்சு, மூன்றாம் உரோசே மன்னர்

வில்லியம் பார்சன்சு, 3 ஆம் உரோசே மன்னர் (William Parsons, 3rd Earl of Rosse, 17 சூன் 1800 – 31 அக்டோபர் 1867) ஓர் அயர்லாந்து பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் பல தொலைநோக்கிகலைக் கட்டியமைத்தார்.[1]பார்சுடவுன் இலெவியாதான் என மக்களால் வழங்கப்பட்ட இவரது 72 அங்குலத் தொலைநோக்கி அப்போது உலகிலேயே மிகப்பெரிய பொருள்வில்லையுள்ள தொலைநோக்கியாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இதைவிடப் பெரிய தொலைநோக்கி உருவாக்கப்படவில்லை.[2]இவர் 1807 முதல் 1841 வரை ஆக்சுமண்டவுன் பாரோன் (Baron Oxmantown) என வழங்கப்பட்டார்.

உரோசே மன்னர்
வில்லியம் பார்சன்சு, 3 ஆம் உரோசே மன்னர்
பிறப்பு(1800-06-17)17 சூன் 1800
யார்க்
இறப்பு31 அக்டோபர் 1867(1867-10-31) (அகவை 67)
மாங்குசுடவுன், டப்லின் கவுண்டி
துறைவானியல்
அறியப்படுவதுதொலைநோக்கி
விருதுகள்அரசு பதக்கம் (1851)

உரோசே மன்னர் தொலைநோக்கிகள் தொகு

உரோசே மன்னர் பல ஒளியியல் தொலைநோக்கிகளை உருவாக்கினார்.[2]இவரது தொலைநோக்கிகள் வார்ப்பு இரும்பால் செய்யப்பட்டவை; பரவளைய வடிவுள்ள, சாணைபிடித்து மெருகூட்டிய எதிர்தெறிப்பு ஆடிகளைக் கொண்டவை.

  • 15-அங்குலம் (38 செமீ)
  • 24-அங்குலம் (61 செமீ)
  • 36-அங்குலம் (91 செமீ) (அல்லது உரோசே 3-அடித் தொலைநோக்கி)
  • 72-அங்குலம் (180 செமீ) (அல்லது உரோசே 3-அடித் தொலைநோக்கி அல்லது "பார்சிடவுன் இலெவியாதான்"). இது 1842இல் தொடங்கி, 1845 இல் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Michael Parsons, 6th Earl of Rosse (Autumn 1968). "William Parsons, third Earl of Rosse". Hermathena (Trinity College Dublin) (107): 5–13. http://www.tcd.ie/Secretary/FellowsScholars/discourses/discourses/1968_Lord%20Rosse%20on%20W.%20Parsons.pdf. 
  2. 2.0 2.1 "Telescopes: Lord Rosse's Reflectors". Amazing-space.stsci.edu. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.

வெளி இணைப்புகள் தொகு