வில்லியம் ஹென்றி சான்ட்லர்

வில்லியம் ஹென்றி சான்ட்லர்,(திசம்பர் 13, 1841 – நவம்பர் 23, 1906) ஒரு அமெரிக்க வேதியியலாளர். 1841 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள், மசாஷஸெட்ஸ்,நியூ பெட்ஃபோர்ட் நகரில், சான்ட்லர் மற்றும் சாரா விட்னி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.சார்லெஸ் என்னும் சகோதரரும்,கேதரின் என்ற சகோதரியும் சான்ட்லரின் உடன் பிறந்தவர்கள் ஆவர்.அவர் யூனியன் கல்லூரியில் கல்வி பயின்றார். 1862 ஆம் ஆண்டிலிருந்து 1867 ஆம் ஆண்டு வரை, வேதியியலாளராக பல நிறுவனங்களில் பணியாற்றினார்.சான்ட்லர், 1868 ஆம் ஆண்டு முதல் 1871ஆம் ஆண்டு வரை, கொலம்பியா ஸ்கூல் ஆஃப் சைன்ஸ் - இல் போதனையாளராகப் பணியாற்றினார்.1871 ஆம் ஆண்டு லீ ஹை பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார்.1872 ஆம் வருடம் ஹாமில்டன் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். கெமிக்கல் சொஸைட்டி ஆஃப் பாரிஸ் மற்றும் கெமிக்கல் சொஸைட்டி ஆஃப் நியூயார்க் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.1876 ஆம் ஆண்டு ஃபிலடால்ஃபியா சென்டினியல் எக்ஸிபிஷனில் நடுவராகவும் 1878 ஆம் ஆண்டு பாரிஸ் எக்ஸிபிஷனில் நடுவராகவும் இருந்தார்.

இவரும், இவருடைய சகோதரர் சார்லெஸ் எஃப் சான்ட்லரும், 1870 ஆம் ஆண்டு முதல் 1877 ஆம் ஆண்டு வரை,ஆசிரியர் பொறுப்பில் இருந்த வேதியியல் இலக்கியம் எனும் சஞ்சிகையில், இவருடைய பங்களிப்புகள் முதன்மையாக வெளிவந்தன. சான்ட்லரின் விருப்பங்கள் வேதியியலுக்கும் அப்பாலும் விரிந்திருந்தன.1878 ஆம் ஆண்டு, லீ ஹை பல்கலைக்கழகத்தில், லின்டர்னேன் நூலகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டு, பல வருடங்கள் பணியாற்றினார்.1898 ஆம் வருடம், சான்ட்லர் கலைக்களஞ்சியம் - " பிரபஞ்ச அறிவின் ஒரு சுருக்கம்" எனும் கலைக் களஞ்சியத்தை சுயமாக வெளியிட்டார். சான்ட்லர், மேரி எலிசெபத் செயர் என்பவரை,1873 ஆம் வருடம் ஜூன் 10 ஆம் நாள் திருமணம் புரிந்து கொண்டார்.அவர்களுக்கு,ராபர்ட், எவிலின் மற்றும் சாரா விட்னி ஆகிய மூன்று குழந்தைகள் இருந்தனர்.அவர் ந்வம்பர் 23 ஆம் நாள், 1906 ஆம் வருடம், பெத்லெஹேம் பென்சில்வேனியாவில் இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  • "National Historic Chemical Landmark: Chandler Laboratory at Lehigh University". American Chemical Society. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.

வெளியிணைப்புகள்

தொகு