வில்லையில் அநேக அடுக்குகள் உள்ளன. அதைச் சுற்றியுள்ள உறை மெல்லியதாகவும் ஊடுருவும் தன்மை கொண்டும் பிரகாசமாகவும் இருக்கும். மனிதன் பார்க்கும் பொருள்கள் அனைத்தும் ஒளிக்கதிர்கள் மூலம் வில்லையை ஊடுருவி விழித்திரையில் விழும்போது தான் மனிதன் அந்தப் பொருளைப் பார்க்க முடிகிறது.

முதல் அடுக்குப் புறணிதொகு

  1. வில்லையின் முதல் அடுக்குப் புறணி என்பது அதற்குள் முதிர்ந்த உட்கரு இருக்கும் பகுதியாகும்.
  2. அடுத்த அடு்க்கு முதிரா உட்கரு, அடுத்து உள்ளது திரு உட்கரு எனப்படுகிறது. இதனுள் மட்டத்தனமான நிலையிலும் குவிந்த நிலையிலும் (Plano Convex)  இரண்டு அங்கங்கள் காணப்படுகின்றன. இறுதியாக வில்லையின் மத்தியில் கரு உட்கரு காணப்படுகிறது. இதுதாள் வில்லையின் மிகப் பழம் பெரும் பகுதி.
  3. வயது முதிரும்போது, வில்லையைச் சுற்றியுள்ள இழைகள், வில்லையின் மத்தியப்பகுதியை அமுக்கிறது. இத்துடன் நீரும் இழக்கப்படுவதால் அது கடினமடைகிறது.இதனால் மத்திய உட்கரு புறணியைவிட திட்பமடைகிறது. புறணி படிப்படியாகக் குறைந்து, முழு வில்லையும் பாதிக்கப்பட்டு கண்புறை உண்டாகிறது. கண்புறை பல வகைப்படும்.
 4. வளர்ச்சிப் புறை, நலிவுப்பறை, காயப்பட்ட புறை, கதிர்வீச்சுப் புறை, சிக்கலுடை புறை, உடலின் மற்ற நோய்களுடன் இணைந்த புறை அறுவை முறை மூலம் வில்லையை அகற்றி விடுதலேயாகும்.
5. சில போது வில்லை பிசகிவிடுகிறது. அதனால், ஓரளவாகவோ, முழுமையாகவோ இடம் பெயர்ந்து பார்வைக் குறைவு.

6. தக அமைவு பாதிப்பு, இரட்டைப் பார்வை, கருவிழிப் படலத்தில் நடுக்ககம் ஆகியவை உண்டாகின்றன.


மேற்கோள் நூல்கள்:

 அறிவியல் களஞ்சியம் தொகுதி - 19.
 பக்கம் - 112 - 2010


 திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளரால் தொகுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லை&oldid=2637145" இருந்து மீள்விக்கப்பட்டது