விளம்பர மென்பொருள்
விளம்பர மென்பொருள் (Adware) என்பது தானியங்கு முறையில் விளம்பரங்களை வழங்கும் மென்பொருட்பொதி ஆகும்.[1] இவ்விளம்பர மென்பொருள்கள் மேல் வரல் பட்டி வடிவில் அமைந்திருப்பதுண்டு. சில மென்பொருள்களை நிறுவும்போது விளம்பர மென்பொருள்கள் காட்டப்படுவதுமுண்டு.
விளம்பர மென்பொருள் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல. ஆனாலும் சில விளம்பர மென்பொருள்கள் உளவு மென்பொருள்களைக் கொண்டிருந்து கணினியிலுள்ள தகவல்களைத் திருடக்கூடியவை.[2]
தீம்பொருள்
தொகுதகவல்களைத் திருடுகின்ற சில விளம்பர மென்பொருள்கள் தீம்பொருள்களின் ஒரு பிரிவான உளவு மென்பொருள்களினுள் அடக்கப்படும்.
பாதுகாப்பு
தொகுதீய விளம்பர மென்பொருள்களைக் கண்டுபிடித்து அகற்றுவதற்கு செய்நிரல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அட்-அவார், மால்வேர்பைட்ஸ்' அன்டி-மால்வேர், ஸ்பைவேர் டாக்டர், ஸ்பைபாட்-சேச் & டிஸ்றோய் முதலிய மென்பொருள்களைப் பயன்படுத்தித் தீங்கு விளைவிக்கக்கூடிய விளம்பர மென்பொருள்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தவோ நீக்கவோ முடியும்.[3] தற்போது வெளிவரும் பெரும்பாலான வணிக நச்சுநிரல் தடுப்பிகள் தீய விளம்பர மென்பொருள்களைக் கண்டறியக் கூடியவையே.
எடுத்துக்காட்டுகள்
தொகு- 180சேச் அசிஸ்டன்ட்
- Ask.com கருவிப்பட்டை
- போன்சிபடி
- கிளிப் ஜெனி
- காமத் கர்சர்
- சய்டூர்
- டாலர்ரெவென்யூ
- பிளாஷ்கெட்
- கேட்டர்
- ஐசேச்
- மிரர் கருவிப்பட்டை
- மைவே சேச்பார்
- வியூபாயிண்ட் மீடியா பிளேயர்
- வென்யூ சேவ்நௌ
- சாங்கோ தயாரிப்புகள்
- ஜ்வின்கி
- ஹாட்பார்
- டென்சென்ட் க்யூ. க்யூ.
- பிளே பிக்கிள்
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ விளம்பர மென்பொருள் (ஆங்கில மொழியில்)
- ↑ விளம்பரமென்பொருள் (ஆங்கில மொழியில்)
- ↑ ["இலவச விளம்பர மென்பொருள் நீக்கற்கருவிகளின் பட்டியல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-10-19. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12. இலவச விளம்பர மென்பொருள் நீக்கற்கருவிகளின் பட்டியல் (ஆங்கில மொழியில்)]