விளாதிசுலாவ் விளாதிமிரோவிச் செவ்செங்கோ
உருசிய வானியலாளர்
விளாதிசுலாவ் விளாதிமிரோவிச் செவ்செங்கோ (Vladislav Vladimirovich Shevchenko) (உருசியம்: Владислав Владимирович Шевченко, பிறப்பு: 18 ஜூன் 1940) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் நிலாத்தேட்டத்துக்காகப் பெயர்போனவர். இவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின் சுடென்பர்கு அரசு வானியல் நிறுவன, நிலா, கோள் ஆராய்ச்சி துறையின் தலைவரும் ஆவார்.
விளாதிசுலாவ் விளாதிமிரோவிச் செவ்செங்கோ | |
---|---|
பிறப்பு | 18 சூன் 1940 (அகவை 84) |
பணி | வானியல் வல்லுநர் |
வேலை வழங்குபவர் | |
தகைமைகள்
தொகு- 1978 முதல் அண்மை வரை – பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் நிலாச் செயல்பாட்டுக் குழுவின் தலைவர்; கோள் அமைப்பு பெயரீட்டுச் செயல் குழு உறுப்பினர்.
- 1991-1995 – அமெரிக்க குடிமைப் பொறியியல் கழகத்தின் நிலா அடிப்படைக் கட்டமைப்பு செயலூக்கக் குழுவின் உறுப்பினர்.
- 1978-1997 – உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் மன்ற நிலா, அறிவன் (புதன்) செயல் குழுவின் தலைவர்.
- 1989-1993 – பன்னாட்டு அருஞ்சூழல் வடிவமைப்புக் கழக உறுப்பினர் (IDEEA உறுப்பினர்).
- 1993-1997 - சூரியக் குடும்ப ஆராய்ச்சி (Solar System research) (உருசிய அறிவியல் கல்விக்கழகப் பருவமுறை இதழ்) .
- 1990-1997 - புவியும் புடவியும் (The Earth and the Universe) (உருசிய அறிவியல் கல்விக்கழகப் பருவமுறை இதழ்) ஆசிரியர் குழு உறுப்பினர்.
- பன்னாட்டு வானியல் ஒன்றிய உறுப்பினர் (ஆணையம் 16).
- பன்னாட்டு வானியல் கழக உறுப்பினர்.
- பன்னாட்டுப் புவி இயற்பியல், புவியளவையியல் ஒன்றிய உறுப்பினர்.
- கோஸ்பார் (COSPAR) உறுப்பினர்.