விளாதிமிர் அர்னோல்தி
உருசிய தாவரவியலாளர்
விளாதிமிர் மித்ரொபானோவிச் அர்னோல்தி (Vladimir Mitrofanovich Arnoldi, உருசியம்: Влади́мир Митрофа́нович Арно́льди, 25 சூலை [யூ.நா. 13 சூலை] 1871 — 22 மார்ச் 1924) என்பவர் உருசியா நாட்டைச் சேர்ந்த ஒர் உயிரியல் பேராசிரியராவார். விளாதிமிர் உருசிய அறிவியல் அகாடமியுடன் தொடர்புடைய உறுப்பினராக இருந்தார். மேலும் மலேசியாவிலுள்ள பல்வேறு மதிப்புமிக்க தாவரங்களை ஆராய்ந்து அறிவியல் பூர்வமாக அவற்றைப் பட்டியலிட்டார்.
விளாதிமிர் அர்னோல்தி Владимир Арнольди | |
---|---|
பிறப்பு | கொசுலோவ், உருசியா | 25 சூலை 1871
இறப்பு | மார்ச்சு 22, 1924 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் | (அகவை 52)
கல்வி | முனைவர்(கார்க்கோவ் பல்கலைக்கழகம், 1907) மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் |
பணி | தாவரவியலாளர் பேராசிரியர் |
பணியகம் | கார்க்கோவ் பல்கலைக்கழகம் குபான் பல்கலைக்கழகம் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் |
தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் உருசிய நகரமான தம்போ நகரத்தில் வாழ்ந்தார். இவரது மகன் கான்சுடான்டின் அர்னால்டி ஒரு முக்கியமான பூச்சியியல் வல்லுநர் ஆவார்.
தாவரங்களின் தாவரவியல் பெயரை மேற்கோள் காட்டும்போது இந்த நபரை ஆசிரியராகக் குறிக்க நிலையான சுருக்கமான அர்னால்டி பயன்படுத்தப்படுகிறது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ * Author search – IPNI search for author names and standard abbreviations