விழிகட் பேதைப் பெருங்கண்ணனார்

விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணை 242 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் காணக் கிடக்கிறது. அது சொல்லும் செய்தி வருமாறு:

தளவம் (செம்முல்லை)

கார்காலம் வந்ததும் திரும்புவேன் என்று தன் காதலிக்கு வாக்களித்த தலைவன் தன் வாக்குத் தவறாமல் திரும்ப எண்ணித் தன் தேரை இல்லம் நோக்கித் திருப்புமாறு தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.

பிடவம் - இலையே இல்லாமல் உதிர்ந்து பூத்திருக்கிறது.
தளவம் - புதரில் படர்ந்து பூத்துக் கிடக்கிறது.
கொன்றை - பொன் போலப் பூத்திருக்கிறது.
காயா - சின்னக் கிளைகளில் பூத்திருக்கிறது.
கார்காலம் வந்துவிட்டது.

நம் தேரைக் கண்டு, அதோ பார், பெண்மான் களர்நிலத்தில் ஓடிவிட அதன் ஆண்மான் அதனைத் தேடிக்கொண்டிருக்கிறது.