விழித்திரை
விழித்திரை (Retina) என்பது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.[1] விழி வெளிப்படலம், திரவம், லென்ஸ், கூழ்ம திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்வேதி மாற்றங்களை உண்டு செய்து மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. மூளை இத் தகவல்களை உருவங்களாக மாற்றுகிறது.
விழித்திரை | |
---|---|
மனிதரின் வலது கண். மிருகங்கள் பலவற்றின் கண்கள் மனிதக் கண்ணிலிருந்தும் வேறுபட்டவை. | |
கிரேயின் | |
தமனி | central retinal artery |
ம.பா.தலைப்பு | Retina |
எல்லாப் பொருட்களின் பிம்பமும் விழித்திரையில் தலை கீழாகத் தான் விழும். மூளை தான் இவற்றை நேராக்குகிறது.
விழித்திரையில் பத்து அடுக்குகள் உள்ளன.[2] வெளியிலிருந்து உள்ளாக அவை பின்வருமாறு,
- நிறமிகள் கொண்ட எபிதீலியம் உள்ள அடுக்கு
- ஒளி உணர்விகளான கூம்புகளும் குச்சிகளும் உள்ள அடுக்கு
- வெளிப்புற எல்கை அடுக்கு
- வெளிப்புற உட்கரு அடுக்கு
- வெளிப்புற மடிப்பு அடுக்க
- உட்புற உட்கரு அடுக்கு
- உட்புற மடிப்பு அடுக்கு
- நரம்பணுத் திரள் அடுக்கு
- நரம்பு இழை அடுக்கு
- உட்புற எல்கை அடுக்கு
2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் விழித்திரை மெய்மம் அல்லது திசுவை மறு வளர்ச்சி செய்யும் புதிய நுட்பத்தை விளக்கியுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sensory Reception: Human Vision: Structure and function of the Human Eye" vol. 27, Encyclopaedia Britannica, 1987
- ↑ The Retinal Tunic. Virginia-Maryland Regional College of Veterinary Medicine
- ↑ New techniques regrow lens, cornea tissue