விழிப்பு நிலையில் மக்கள் (ஹொங்கொங்)

விழிப்பு நிலையில் மக்கள் என்பது ஹொங்கொங் அரசாங்கம், ஹொங்கொங் மக்களை எப்பொழுதும் விழிப்பு நிலையில் வைப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அறிவுருத்தல்கள் போன்றவற்றைக் குறிக்கும்.

கட்டடக் கட்டுமாணப் பணி

தொகு

எடுத்துக்காட்டாக ஒரு வீட்டுத் தொகுதியோ ஒரு வானளாவி ஒன்றினதோ கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றால், அது என்ன கட்டடம், அதன் கட்டுமாணப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் போன்றன பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரப் பலகை இட்டிருக்க வேண்டும். கட்டட வடிவமைப்பு, அதன் விபரம் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் எத்தனை பேர் பணிப்புரிகிறார்கள், எத்தனையாம் திகதி கட்டுமாணப் பணி ஆரம்பம் ஆனது. எத்தனைப் பேருக்கு காயங்கள் ஏற்பட்டன என்பவற்றைக் கூட பொது மக்களின் பார்வைக்கு வெளியில் அறிவித்தல் பலகையில் இடவேண்டும்.

இன வேறுபாடு

தொகு

ஹொங்கொங்கில் கண்டோனிசு மொழி பேசுவோரே 95% வீதம் உள்ளனர். ஏனையோர் 5% வீதம் மட்டுமே ஆகும். இருப்பினும் இனவேறுபாடு என்றால் என்ன அதனடிப்படையிலான சட்டங்கள். அவ்வாறான நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் என்ன செய்ய வேண்டும், எங்கு முறையிட வேண்டும் எனும் அறிவுறுத்தல்களை தொடர்புடைய அமைப்புகள் மக்களுக்கு இலவசமாக அறிவிக்க வேண்டும். ஹொங்கொங் குடிவரவு திணைக்களம் சென்றால் இன வேறுபாடு சட்டமும் நானும் எனும் நூல் முழு அறிவுறுத்தலுடன் இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்.