விழுக்காட்டில் ஆழ கதிர் ஏற்பளவு
கதிர் மருத்துவத்தில், விழுக்காட்டில் ஆழ கதிர் ஏற்பளவு (Percentage depth dose - %DD) என்பது தொலைக் கதிர் மருத்துவத்தின் போது (teletherapy) புற்றுத்திசுக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஏற்பளவினை (Dose) காணப் பயன்படும் அளவுகளாகும். மனித உடலில் அளவீடுகளை நேரடியாகச் செய்ய முடியாது. இதற்காக 30*30*30 செ.மீ. பக்கங்களைக் கொண்ட தொட்டியில் தண்ணீரை எடுத்துக் கொண்டு பல ஆழங்களில் அளவீடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக தானியங்கி ஆய்கருவிகள் உள்ளன. கிலோ வோல்ட் கதிர்களுக்கு புறப்பரப்பில் உச்ச அளவு உள்ளது. ஆனால் மெகாவோல்ட் கதிர்களுக்கு உச்ச அளவு புறப் பரப்பிலிருந்து சற்று ஆழத்தில்- கோபால்ட் 60 கதிர்களுக்கு இந்த உச்ச அளவு 0.5 செ.மீ. ஆழத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆழத்திலும் காணப்படும் அளவு உச்ச அளவின் விழுக்காட்டில் கொடுக்கப்படுகிறது புல அளவோடு இவ்வளவும் சிறிது மாறுபடுகிறது. அட்டவணைகளும் உள்ளன. இவைகளின் துணையுடன் துல்லியமாக புற்று திசுக்களுக்கான ஏற்பளவினைத் துல்லியமாகக் கணிக்கலாம்.
ஒருபள்ளியில் ஏற்பளவு*100 %DD = --------------------- உச்ச ஏற்பளவு
புல அளவு கூடும்போது % அளவுகளும் கூடுகின்றன. அதுபோல் ஆற்றல் கூடும் போதும் % அளவுகள் கூடுகின்றன.