விவேக சிந்தாமணி

பழமையான தமிழ் நூல்

விவேக சிந்தாமணி என்பது ஒரு பழமையான தமிழ் நூலாகும். இது அனுபவ மூதுரைகளைக் கொண்ட தமிழ் செய்யுள் தொகுப்பாகும். இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்பதும் தெரியாது. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். இந்நூலில் சிந்தனைக்குகந்த, பொருள் பொதிந்த வார்த்தைகளால் நீதிகளும், அழகியலும் செய்யுள் நடையில் சொல்லப்பட்டு இருக்கிறது. தனிப்பாடல்களாக இருந்த பாடல்களைத் தொகுத்து இந்த நூல் உருவானது என்ற அனுமானமும் உண்டு.

விவேக சிந்தாமணி நூலின் முதற் பக்கம்

பகுத்தறிவு பட்டறிவின் தெளிவு.
நினைவில் ஒளிரும் மணி சிந்தாமணி.
பகுத்தறிவு மணிகளே ‘விவேக சிந்தாமணி’.
இந்த நூல் தொகுப்பில் 135 பாடல்கள் உள்ளன.
மேலும் சில பிரதிகளில் மட்டும் காணப்படும் பாட்டும் ஒன்று உள்ளது.

  • பாடல் எடுத்துக்காட்டுண


தகைமைகள்

வேத மோதிய வேதியர்க் கோர்மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே. (26)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக_சிந்தாமணி&oldid=3933840" இலிருந்து மீள்விக்கப்பட்டது