விஷால் சந்திரசேகர்

விஷால் சந்திரசேகர் (Vishal Chandrasekhar ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர். இவர் தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[1]

விஷால் சந்திரசேகர்

வாழ்க்கை

தொகு

விசால் தன் ஆறுவயதில் கீபோர்டை வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தன் பத்து வயதிலேயே தனியாக நிகழ்ச்சிகளில் வாசிக்க ஆரம்பித்தார். இவர் 2002இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைந்து மிண்ணணு ஊடகப்பிரிவில் பட்டம் பெற்றார். தன் நன்பர்களுடன் இணைந்து 300 குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2006 ஆண்டுக்குள் ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். ஆனால் ஒரு படம்கூட வெளியாகவில்லை. 172 விளம்பரப் படங்களுக்கு விளம்பர இசை அமைத்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான பரிசினைப்பெற்றார். நண்பர் மூலமாக சந்தோஷ் சிவனின் அறிமுகம் கிடைத்து, அவரின் இனம் திரைப்படத்திற்கு இசையமைத்தார். ஜில் ஜங் ஜக் திரைப்படத்திற்கு இவர் அமைத்த இசையால் புகழ்பெற்றார்.[2]

இசையமைத்தவை

தொகு
ஆண்டு
படத்தின்

பெயர்

மொழி குறிப்பு
2013 ஹாய் டா தமிழ்
வெளிவரவில்லை
2013 ஹிருதயம்

எக்கடுன்னதி

தெலுங்கு
2013 இனம் தமிழ்
2014 அப்புச்சி

கிராமம்

தமிழ்
2015 ஜில்.ஜங்.ஜக் தமிழ்
2016 அகம்
தமிழ்
2016 அவியல்
தமிழ்
2016 சவாரி
தமிழ்
2016 கிருஷ்ணா

காடிவீர
பிரேம கதா

தெலுங்கு
2016 சிம்பா
தமிழ்
தயாரிப்பில்[3]
2016 தாமி
தமிழ்
தயாரிப்பில்
2016 7 நாட்கள் தமிழ்
தயாரிப்பில்
2016 குற்றம் 23 தமிழ்
தயாரிப்பில் 2021' "ஓ மனம் பெண்ணே"

மேற்கோள்கள்

தொகு
  1. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/music/Vishal-Chandrasekhar-to-score-music-for-Nani-Hanus-film/articleshow/46369221.cms
  2. "புறப்படும் புதிய இசை- 8: ரஹ்மான் பள்ளியில் இசை கற்றவர்". தி இந்து (தமிழ்). 20 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
  3. "Punjabi kudi to debut in K'town". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷால்_சந்திரசேகர்&oldid=3578280" இலிருந்து மீள்விக்கப்பட்டது