விஷ்ணுபுரம் சரவணன்

இயற்பெயர் சரவணன் என்பதைக் கொண்ட இவர், திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் ஊரில் பிறந்தவர். கவிஞர், கட்டுரையாளர், கதைச்சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார்.

ஆழி, ஆனந்த விகடன் ஆகிய பத்திரிகைகளிலும் நியூஸ் தமிழ் எனும் செய்தித்தொலைக்காட்சியிலும் பணியாற்றியவர்.[1] தொடக்கத்தில் கவிதைகள் வழியாக தமிழ் இலக்கிய வட்டத்துக்குள் நுழைந்த இவர், காலப்போக்கில் குழந்தைகள் கதை சொல்லியாகவும், நாடக அமைப்பாளராகவும் மாறி, தற்போது முழுக்க முழுக்க குழந்தைகள் இலக்கியத்தொண்டு ஆற்றி வருகிறார்.

படைப்புகள்

தொகு
  1. வாத்து ராஜா (2013)
  2. கதைகதையாம் காரணமாம் (2017)
  3. வித்தைக்காரச் சிறுமி (2017)[2]
  4. ஒற்றைச் சிறகு ஓவியா (2019) [3]
  5. வானத்துடன் டூ (2019)
  6. நீலப்பூ (2021)
  7. கயிறு (2022)
  8. கதை கதையாம் காரணமாம் (ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கான நூல்)
  9. சாதனாவின் தோழி (சிறார் கதை நூல்)
  10. குழந்தைகளுக்கு மரியாதை (பெற்றோரிய நூல்)
  11. Duck King

விருதுகள்

தொகு
  1. ஆனந்த விகடன் சிறார் விருது (2019)
  2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் விருதுகள்
  3. வாசகச் சாலை இலக்கிய அமைப்பின் விருது
  4. படைப்புக் குழுமம் விருது - நீலப்பூ நாவலுக்காக (2022)
  5. சமயபுரம் எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் சிறார் இலக்கிய விருது (2023)

சான்றுகள்

தொகு
  1. "வி.எஸ்.சரவணன்". விகடன். https://www.vikatan.com/author/2893-v.s.saravanan. பார்த்த நாள்: 25 October 2023. 
  2. "வித்தைக்காரச் சிறுமி / விஷ்ணுபுரம் சரவணன்.". National Library Board. https://www.nlb.gov.sg/biblio/203022488. பார்த்த நாள்: 18 January 2023. 
  3. "விஷ்ணுபுரம் சரவணன்". இந்து தமிழ் திசை. https://kamadenu.hindutamil.in/author/vissnnupurm-crvnnnnn. பார்த்த நாள்: 18 January 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுபுரம்_சரவணன்&oldid=3836280" இலிருந்து மீள்விக்கப்பட்டது