விஷ்ணு ஹரி கல்வெட்டு
விஷ்ணு ஹரி கல்வெட்டு (Vishnu Hari inscription / Hari-Vishnu inscription) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி மாவட்டத்தின் தலைமையிடமாக அயோத்தி நகரத்தில் இருந்த பாபர் மசூதியின் வளாகத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1992-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்த போது கண்டுபிடிக்கப்பட்டது. 1992-இல் பாபர் மசூதியின் இடிபாடுகளில் விஷ்ணு ஹரி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு நாகரி எழுத்துருவில் சமசுகிருத மொழியில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு 12-ஆம் நூற்றாண்டில் சாகேதம் எனும் அயோத்தியை ஆண்ட அனயசந்திர வம்ச மன்னர் கோவிந்தசந்திரன் நிறுவிய கோயில் குறித்த செய்தியினைத் தருகிறது. இக்கல்வெட்டின் சில பகுதிகள் கிடைக்கவில்லை. மேலும் இக்கல்வெட்டு பாபர் மசூதி இடிப்பிற்கு பின் வைக்கப்பட்டதாக சர்ச்சைகள் உள்ளது.
கல்வெட்டின் சுருக்கம்
தொகுநாகரி எழுத்தில் சமசுகிருத மொழியில் இருபது வரிகள் சுலோகங்கள் கொண்ட இந்த மணற்கல் கல்வெட்டு 1.10 மீ x 0.56 மீ அளவுள்ள மணற்கல்லால் ஆனது. இக்கல்வெட்டு பாபர் மசூதியின் இடிபட்ட சுவரின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.[1][2] [3]இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு வல்லுநர்கள் கே.வி.ரமேஷ் மற்றும் எம்.என்.கட்டி ஆகியோர் இக்கல்வெட்டுகளை மொழிபெயர்த்துள்ளனர். [4] இக்கல்வெட்டு கடவுள் வணக்கத்துடன் தொடங்குகிறது. பின்னர் ஒரு புகழ்பெற்ற வம்சத்தை விவரிக்கிறது. கல்வெட்டின் 6-18 வரிகள் கர்ணன் அல்லது மாமே, சல்லக்ஷனா மற்றும் அல்ஹானா உட்பட வம்சத்தின் உறுப்பினர்களின் வீர வெற்றிகளை விவரிக்கின்றன.[5] சமசுகிருத மொழி அறிஞர் கிஷோர் குனாலின் கூற்றுப்படி, இவர்கள் அனயசந்திரருக்கு முன் சாகேத மண்டலத்தின் ஆளுநராக இருந்த கஹாடவாலாவின் கீழ்ப்படிந்தவர்கள் என்று தோன்றுகிறது.[6] கல்வெட்டின் 19-21 வரிகள் அல்ஹானாவின் வாரிசான அனயச்சந்திராவின் செயல்பாடுகள் மற்றும் அயோத்தியில் விஷ்ணு-ஹரி கோயில் கட்டுவது தொடர்பாக கூறுகிறது. மீதமுள்ள வசனங்கள் அவரது வாரிசான ஆயுஷ்சந்திராவை விவரிக்கின்றன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Braj Basi Lal 2003, ப. 124.
- ↑ K. M. Shrimali 2002, ப. 614.
- ↑ A. G. Noorani 2003, ப. 131.
- ↑ Pushpa Prasad 2003, ப. 351.
- ↑ Kishore Kunal 2016, ப. 321-326.
- ↑ Kishore Kunal 2016, ப. 328.
- ↑ Kishore Kunal 2016, ப. 326-330.
ஆதார நூற்பட்டியல்
தொகு- A. G. Noorani (2003). The Babri Masjid Question, 1528–2003: 'a Matter of National Honour'. Tulika. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85229-78-2.
- Braj Basi Lal (2003). "The Excavations at Ayodhya". In Robert Layton, Peter G. Stone and Julian Thomas (ed.). Destruction and Conservation of Cultural Property. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-60498-2.
- K. V. Ramesh (archaeologist) (2003). "Ayodhya Vishnu-Hari Temple Inscription". Purātattva (Indian Archaeological Society): 98–104. https://books.google.com/books?id=qNxtAAAAMAAJ.
- Kishore Kunal (2016). "A tale of two edicts (Tretā Ka Ṭhākura and Vishṇu-hari inscriptions)". Ayodhya Revisited. Ocean. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8430-357-5.
- M. G. S. Narayanan (8 August 2014). "A warning from history by MGS Narayanan". India Today. http://indiatoday.intoday.in/story/mgs-narayanan-warning-from-history-romila-thapar/1/376161.html.
- Jahnawi Shekhar Roy (1994), "A Note on Ayodhya inscription", in Lallanji Gopal (ed.), Ayodhyā: History, Archaeology, and Tradition : Papers Presented in the Seminar Held on Feb. 13-15, 1992, All India Kashiraj Trust, pp. 114–
- K. M. Shrimali (2002). "Ayodhya: A Review of the Archaeological Evidence". The Making of History: Essays Presented to Irfan Habib. Anthem. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-038-9.
- Pushpa Prasad (2003). "Three Recently Found Inscriptions at Ayodhya". Proceedings of the Indian History Congress (64th Session Mysore) (Indian History Congress) 64: 348–361. https://books.google.com/books?id=NHQMAQAAMAAJ.
- Irfan Habib (2006), "Medieval Ayodhya (Awadh), Down to The Mughal Occupation", Proceedings of the Indian History Congress, 67: 358–382, JSTOR 44147957
- Ram Sharan Sharma (2003). "The Ayodhya Issue". In Robert Layton, Peter G. Stone and Julian Thomas (ed.). Destruction and Conservation of Cultural Property. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-60498-2.
- Meenakshi Jain (2013), Rama and Ayodhya, New Delhi: Aryan Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173054518