வி. அப்பசாமி வாண்டையார்
இந்திய அரசியல்வாதி
ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார், இந்திய அரசியல்வாதியும் மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பூண்டி எஸ்டேட்டின் தலைவராக இருந்தார். [1]
சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920 ல் நடந்த தேர்தலில் நீதிக் கட்சி (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] [3]
இவருடைய மகன்கள் ராவ் பகதூர் அ. வீரயா வாண்டையார் மற்றும் அ. கிருஷ்ணசாமி வாண்டையார் ஆவார்கள்.