வி. என். பரமேசுவரன் பிள்ளை

திருவிதாங்கூர் இராணுவத் தளபதி

வி. என். பரமேசுவரன் பிள்ளை (V.N. Parameswaran Pillai) இவர் திருவிதாங்கூர் நாயர் இராணுவத்தில் பணிபுரிந்த கடைசி இராணுவத் தளபதியாவார் . இவர் 1945 இல் தான் பணியிலிக்கும் போது திருவிதாங்கூர் இராச்சியத்திற்குள் இந்தியத் தரைப்படை உள்வாங்குவதை மேற்பார்வையிட்டார். ஒருங்கிணைந்த திருவிதாங்கூர்-கொச்சி படைகள் கலைக்கப்பட்டபோது, 1949 இல் இவர் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார். அலங்காரத்தையும் சம்பிரதாயங்களையும் பராமரிப்பதில் கவனமாக இருந்த ஒரு வளமான சிப்பாய் என்று இவர் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். [1]

பிள்ளை நெய்யாற்றிங்கரையின் அரயூரில் பிறந்த, இவர் முறையான ஆங்கிலக் கல்வியைப் பெறவில்லை. எனவே முதலில் திருவிதாங்கூர் நாயர் படைப்பிரிவில் சிப்பாயாக சேர்ந்தார். ஆனால் இவரது கடின உழைப்பின் மூலம், இவர் ஒரு சிறப்பானக் கல்வி பின்னணியை அடைந்தார். அதே நேரத்தில், இராணுவத்தின் தரங்களில் உயர்ந்தார். இறுதியாக இராணுவத் தளபதியானார். இவரது துணை அதிகாரிகள் இவரை 'இராணுவத் தளபதி குட்டன் பிள்ளை' என்று அன்போடு அழைத்தனர். பிரிட்டிசு சாம்ராஜ்யத்தின் ராணியிடமிருந்து கௌரவத்தைப் பெற்ற திருவிதாங்கூர் நாயர் படைப்பிரிவின் ஒரே அதிகாரியாக இவர் இருந்து வருகிறார். [2]

குறிப்புகள்

தொகு