வி. எம். ராஜலட்சுமி

இந்திய அரசியல்வாதி

வி. மு. ராஜலட்சுமி (V. M. Rajalakshmi) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். 2014 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று சங்கரன்கோவில் நகர மன்றத் தலைவியாகப் பதவி வகித்தார். 2016 ஆண்டு தனது நகரமன்றத் தலைவி பொறுப்பைவிட்டு விலகி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார்.[1] 2016ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[2][3] 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவர் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் வசிக்கிறார். இவரது கணவர் பெயர் முருகன். இவர்களுக்கு அரிணி என்ற மகளும், பிரதீப் என்ற மகனும் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. Archived from the original on 2016-05-25. Retrieved 29 மே 2016.
  2. "Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23". The Hindu. 21 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece. பார்த்த நாள்: 2017-05-04. 
  3. "ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்!". ஒன் இந்தியா. 21 மே 2016. Retrieved 29 மே 2016.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எம்._ராஜலட்சுமி&oldid=4177057" இலிருந்து மீள்விக்கப்பட்டது