வி. கி. முனுசாமி

இந்திய சுடுமட்பாண்ட்டக் கலைஞர்

வி. கி. முனுசாமி (V .K. Munusamy) இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுடுமட்பாண்டக் கலைஞராவார். வி. கி. முனுசாமி கிருஷ்ணபக்தர் என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். 1967 ஆம் ஆண்டு சூலை மாதம் 21 ஆம் நாளில் வி.கிருஷ்ணபதர் மற்றும் மங்கலட்சுமி தம்பதியருக்கு மகனாக முனுசாமி பிறந்தார்.[1]

முனுசாமி புதுச்சேரியில் மாணவர்களுக்கான சுடுமட்பாண்டம் பயிற்சிப் பட்டறை நடத்துகிறார்.

சுடுமட்பாண்டக் கலைத்துறையில் ஆற்றிய சீறிய பணிக்காக 2020 ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3][4][5]

வில்லியனூரை தளமாகக் கொண்ட இக்கலைஞர் பல தலைசிறந்த படைப்புகளை உருவாக்கி பெருமை சேர்த்துள்ளார். உலகின் மிக உயரமான 17 ½ அடி அளவிலான சுடுமண் குதிரை சென்னை அமெரிக்கன் பன்னாட்டுப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது. தென்னிந்திய கோயில்களுக்கு பல சிற்பங்களை உருவாக்கித் தந்துள்ளார். அமெரிக்கா, பிரான்சு, செருமனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் பல்வேறு பன்னாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். கலை மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக கோட்டா பழங்குடியினர், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சுடுமட்பாண்ட கலையில் பயிற்சி அளித்து வருகிறார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Jan 27, Bosco Dominique / TNN / Updated:; 2020; Ist, 14:36. "Puducherry: Manoj Das, V K Munusamy bag Padma honours". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-05-15. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. Sivaraman, R. (September 9, 2015). "Just clay and hands" – via www.thehindu.com.
  3. "Puducherry: Manoj Das, V K Munusamy bag Padma honours | Puducherry News - Times of India". The Times of India.
  4. "22 generations of terracotta artistry". December 18, 2017.
  5. "List of Padma Shri Award winners in 2020" (PDF). padmaawards.gov.in.
  6. "Puducherry CM felicitates Padma awardees". The Hindu (in Indian English). 2020-01-29. Retrieved 2021-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கி._முனுசாமி&oldid=4294388" இலிருந்து மீள்விக்கப்பட்டது