வி. கே. எசு. சிவக்குமார்
வி. கே. எசு. சிவக்குமார் புதுச்சேரி ஒன்றியப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதி. 1980 முதல் திருமலை ராயன் பட்டிண சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். புதுச்சேரி மாநிலத்தில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1996-2000 வரை சபாநாயகராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை திமுக சார்பாகவும் ஒரு முறை கட்சி சார்பற்றவராகவும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 2011ஆம் ஆண்டு திமுக கலக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். ஏப்பிரல் 2016 இல் அதிமுகவில் இணைந்தார். [1][2]2016ஆம் ஆண்டு நிரவி பட்டினத்தில் (திருமலை ராயன் பட்டினம்) அதிமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மரணம்
தொகு2 சனவரி 2017 அன்று தன்னுடைய திருமண மண்டப கட்டுமானப்பணியை மேற்பார்வையிட சென்ற போது காரைக்காலில் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். [3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Independent Puducherry MLA Sivakumar joins AIADMK". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2017.
- ↑ "V.M.C. Sivakumar joins AIADMK". இந்து. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2017.
- ↑ "Former Puducherry minister VMC Sivakumar hacked to death". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2017.
- ↑ "Puducherry leader VMC Sivakumar hacked to death". இந்து. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2017.