வி. சி. கோவிந்தசாமி

வி. சி. கோவிந்தசாமி என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1971, 1989 தேர்தல்களில் காவிரிப்பட்டினம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2] மேலும் இவர் ஒரு மொழிப்போர் தியாகி ஆவார்.

அவர் 2007 முதல் 2011 வரை மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவராக இருந்தார்.

சாதனைகள்

தொகு
  • இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் 1973 மே மாதம் நிறுவப்பட்டது
  • போச்சம்பள்ளியில் சூரியகாந்தி எண்ணெய் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டது
  • பல்வேறு பள்ளிக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டன.
  • ஆறு உழவர் சந்தைகள் இவர் வேளாண்மை விற்பனைக்குழு தலைவராக இருந்தபோது திறக்கப்பட்டது.
  • கிருஷ்ணகிரியில் பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டது.
  • முதன்முதலில் பையூரில் மாங்கூழ் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இவரது முயற்சியால் நிறுவப்பட்டது.

வகித்த பதவிகள்

தொகு
  • ஊராட்சி தலைவர்
  • சட்டமன்ற உறுப்பினர்
  • மாவட்ட அமைதிக்குழு உறுப்பினர்
  • கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை (Syndicate) உறுப்பினர்
  • மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவர்[3]
  • மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி துறை தலைவர்
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்
  • பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்
  • மொழிப்போர் தியாகி

கடசியில் வகித்த பதவிகள்

தொகு
  • கிளைக்கழக செயலாளர்
  • ஒன்றிய செயலாளர்
  • மாவட்ட துணை செயலாளர்
  • பொதுக்குழு உறுப்பினர்
  • செயற்குழு உறுப்பினர்

குறிப்புகள்

தொகு
  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  2. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  3. "Appointed". The Hindu (in Indian English). 2007-07-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சி._கோவிந்தசாமி&oldid=3571431" இலிருந்து மீள்விக்கப்பட்டது