வி1
வி1 (V1) என்பது 27 திசம்பர் 2019-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பேரடைம் பிக்சர் ஹவுஸ், கலர்புல் பீட்டா மூவ்மண்ட் ஆகியன இணைந்து தயாரிக்க, பாவெல் நவகீதன் எழுதி, இயக்கியக் குற்றம்-பரபரப்புத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும், லிஜிஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் ஆகியோர் பிற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1] இப்படத்துக்கான ஒளிப்பதிவை டி. எஸ். கிருஷ்ணாசேகரும், பின்னணி இசையை ரோனி ரப்ஹெலும், படத்தொகுப்பை சி. எஸ். பிரேம்குமாரும் மேற்கொண்டுள்ளனர். இப்படம் முழுவதுமாக சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.
வி 1 | |
---|---|
இயக்கம் | பாவெல் நவகீதன் |
கதை | பாவெல் நவகீதன் |
இசை | ரோனி ரபேல் |
நடிப்பு | ராம் அருண் காஸ்ட்ரோ விஷ்ணு பிரியா லிஜிஷ் மைம் கோபி காயத்ரி லிங்கா மோனிகா மனிஷா ஜித் |
ஒளிப்பதிவு | டி. எஸ். கிருஷ்ணாசேகர் |
படத்தொகுப்பு | சி. எஸ். பிரேம்குமார் |
கலையகம் | பேரடைம் பிக்சர் ஹவுஸ் கலர்புல் பீட்டா மூவ்மண்ட் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுபடத்தின் நாயகன் காவல் துறையின் தடய அறிவியல் துறையில் பணியாற்றுபவர். இவருக்கு இருட்டைக் கண்டால் பயம் என்ற சிக்கல் உண்டு. இந்நிலையில் வி 1 என்ற கதவு எண் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. இந்தக் கொலையை நாயகன் புலனாய்வு செய்ய வேண்டியுள்ளது. மழையினால் தடயங்கள் எல்லாம் அழிந்த ஒரு நிலையில் நாயகன் எவ்வாறு விசாரணை மேற்கொண்டார். அதில் அவருக்கு உண்டான இடர்பாடுகள் என்ன என்பதே கதை.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ""V1" படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கும் பாவெல் நவகீதன்". செய்தி. cinemapluz.com. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2019.
- ↑ ஆர். சி. ஜெயந்தன் (12 சூலை 2019). "ஒரு வீடு ஒரு கொலை ஒரு அதிகாரி". செவ்வி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2019.