வீசட்
Very Small Aperture Terminal (VSAT) என்றறியப்படும் வீசட் உபகரணமானது பூமிக்கு நிலையாக இருக்கும் ஓர் செய்மதியூடாக இணைய அணுக்கத்தினை வழங்கி வருகின்றது. வீசட் இவை பொதுவாக விநாடிக்கு 1.3 மெகாபிட்ஸ் வேகத்தில் இருந்து விநாடிக்கு 4 மெகாபிட்ஸ் வேகமுள்ள இணைப்பினை வழங்கி வருகின்றது. மேலேற்ற வேகமானது இலங்கையில் தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழுவினால் விநாடிக்கு 33 கிலோபிட்ஸ் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில வீசட் உபகரணங்கள் இணைய அணுக்கத்திற்கு மேலாக ஒலியழைப்புக்களையும் வழங்கி வருகின்றது எனினும் இவற்றூடாக உரையாடும் செய்மதிக்குச் சென்று வருதினால் ஓரளவு நேரம் பொறுத்திருந்தே உரையாடலை மற்றையவர் தொடங்க வேண்டும். ஐக்கிய நாடுகளில் உலக உணவுத் திட்டம், திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுலகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் பொன்றவை பாவித்து வருகின்றன.