வீடு திரும்புதல்

வீடு திரும்புதல் அல்லது தாய் மதம் திரும்புதல் (Ghar Wāpsi இந்தி: घर वापसी) என்பது இந்து, சீக்கியம் மற்றும் சார்ந்த சமயத்திலிருந்து பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதமான இந்து மற்றும் சீக்கிய சமயத்தில் மீண்டும் இணைவதற்கு வீடு திரும்புதல் என்பர்.[1] இதனை இந்தியாவில் செயல்படும் விஷ்வ இந்து பரிசத் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம், வீடு திரும்புதல் என்ற நிகழ்ச்சிகள் மூலம் வேற்று மதத்தினரை மீண்டும் இந்து சமயத்தில் சேர்க்கும் செயல் இந்திய நாடு முழுவதும் நடைபெறுகிறது.[2][3]

கேரளாவின் ஐந்து மாவட்டங்களிலும், கோவாவிலும் வேற்று மதத்தில் இணைந்த கத்தோலிக்க கிறித்தவர்களை மீண்டும் தாய் மதமான இந்து சமயத்திற்கு மாற்றும் நிகழ்ச்சிகள் நடத்த விஷ்வ இந்து பரிசத் அமைப்பு முயல்கிறது.[4].

ஆந்திரா மற்றும் தெலிங்கானா மாநிலத்திலிருந்து 8,000 நபர்கள் மீண்டும் வீடு திரும்புதல் நிகழ்வு மூலம் இந்து சமயத்திற்கு விஷ்வ இந்து பரிசத் மூலம் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்திற்கு திரும்பியுள்ளனர்.[5]

ஏற்கனவே பிற மதங்களுக்கு மாறிய 1,200 நபர்கள் மீண்டும், வீடு திரும்புதல் என்ற நிகழ்ச்சியின் மூலம், இந்து சமயத்திற்குத் திரும்பியுள்ளனர் [6]

வீடு திரும்புதல் என்ற நிகழ்வின் மூலம் தாய் மதமான இந்து மதத்திற்கு மதம் மாற விரும்பும் மஞ்ஹி எனும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களுக்கு, கல்வி, சுகாதாரம், மேம்பட்ட வாழ்க்கை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.[7].

தாய் மதம் திரும்புதல் என்ற நிகழ்ச்சியின் மூலம் மேற்கு வங்காளத்தில் 100 ஆதிவாசி கிறித்தவர்கள் தாய் மதமான இந்து மதத்திற்கு மதம் மாறியுள்ளனர். [8]

மீண்டும் தாய் மதம் திரும்பும், வீடு திரும்பல் என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்து மதத்திற்கு மக்கள் மாற்றப்படுவதை வேறு சமயத்தினர் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். [9]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "SGPC launches drive to counter Christian missionaries in Punjab" (in en). 2021-10-10. https://www.hindustantimes.com/cities/chandigarh-news/sgpc-launches-drive-to-counter-christian-missionaries-in-punjab-101633808437608.html. 
  2. "Ghar Wapsi continues in Kerala; 58 more embrace Hinduism". Rediff News (December 25, 2014). December 25, 2014. http://www.rediff.com/news/report/ghar-wapsi-continues-in-kerala-58-more-embrace-hinduism/20141225.htm. பார்த்த நாள்: 29 December 2014. 
  3. "‘Ghar wapsi’ only way to end terror says BJP leader". Hindustan Times. December 25, 2014. Archived from the original on 29 டிசம்பர் 2014. https://web.archive.org/web/20141229063904/http://www.hindustantimes.com/india-news/newdelhi/ghar-wapsi-only-way-to-end-terror-says-bjp-leader/article1-1300421.aspx. பார்த்த நாள்: 29 December 2014. 
  4. "VHP plans 'ghar wapsi' in 5 Kerala districts today". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/kochi/VHP-plans-ghar-wapsi-in-5-Kerala-districts-today/articleshow/45635205.cms. பார்த்த நாள்: 4 January 2015. 
  5. Faith matters: 'Ghar Wapsi' boom in Telangana, Andhra Pradesh
  6. "RSS to Facilitate 'Ghar Wapsi' of Goan Catholics". The New Indian Express. http://www.newindianexpress.com/nation/RSS-to-Facilitate-Ghar-Wapsi-of-Goan-Catholics/2014/12/28/article2592250.ece. பார்த்த நாள்: 4 January 2015. 
  7. "‘Education, healthcare before ghar wapsi’". The Indian Express. http://indianexpress.com/article/india/india-others/education-healthcare-before-ghar-wapsi/99/. பார்த்த நாள்: 4 January 2015. 
  8. http://indiatoday.intoday.in/story/ghar-wapsi-drive-reconversion-vhp-tribal-christians-converted-to-hinduism--jugal-kishore-praveen-togadia-west-bengal/1/415838.html
  9. http://www.dinamalar.com/news_detail.asp?id=1143509

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீடு_திரும்புதல்&oldid=3771580" இருந்து மீள்விக்கப்பட்டது