வீணா வர்மா
வீணா வர்மா (Veena Verma, 1 செப்டம்பர் 1941 – 6 பெப்ரவரி 2024).[1] என்பவர் மத்தியப்பிரதேசத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் மத்தியப் பிரதேசத்திலிருந்து 1986 முதல் 2000 வரை தொடர்ந்து மூன்று ஆறு ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவராகவும், அகில இந்திய மகளிர் காங்கிரசு மற்றும் இந்திய உலக விவகார குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
குடும்பம்
தொகுவீணா வர்மாவின் கணவர், இந்தி கவிஞர் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து பாராளுமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறீகாந்த் வர்மா (1931-1986) ஆவார்.[2] வர்மாவின் மகன் இந்திய ஆயுத வியாபாரியான அபிஷேக் வர்மா ஆவார். இவரது மருமகள் அன்கா வர்மா என்பவர் மேனாள் உருமேனியா பிரபஞ்ச அழகி ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Three-term MP Veena Verma passed away in Delhi". Daiji World. 6 February 2024. https://www.daijiworld.com/news/newsDisplay?newsID=1165319.
- ↑ "Member of Rajya Sabha from 1952-2003" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.