வீரக்குடி முருகய்யனார் கோவில்
முருகய்யனார் கோயில் என்பது விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகேயுள்ள வீரக்குடியில் அமைந்துள்ளது. [1] [2]
இக்கோயின் மூலவர் வள்ளி தெய்வானை உடனுறை முருகைய்யா உள்ளார். இத்தல மூலவர் பாம்பின் மீது அமர்ந்தவாறு உள்ளது சிறப்பாகும். கண்மாய்க் கரையில் இக்கோயில் அமைந்ததால் கரைமேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு
தொகுவீரக்குடியிலிருந்து பாலினை வியாபார்ததிற்கு எடுத்துச் செல்லும் பெண்மணி இருந்தார். அவர் கண்மாய்க் கரை வழியாய் செல்லும் போது வள்ளிக் கொடியில் கால் இடறி பால் சிந்தியது. தற்செயலாக நடந்தது என்று நினைத்து வி்ட்டுவிட்டாள், ஆனால் இது தொடர்ந்து நிகழ்ந்தது. அதனால் தனது வியாபாரம் அழிந்து போவதைக் கண்டு கோபத்தால் ஒரு கோடரியை வைத்து அக்கொடியை வெட்டினாள். அதிலிருந்து ரத்தம் பீரிட்டுவர பயந்து ஊருக்குள் ஓடினாள். அங்கிருந்தவர்களின் துணையோடு அவ்விடத்திற்கு வந்தாள், அக்கூட்டத்திலிருந்த பெரியவர் அங்கு தோண்டிப் பார்க்கும் படி கூற அங்கு முருகன் சிலை கிடைத்தது. அதனை முறையாக வழிபட ஆலயம் அமைத்தனர்.
சிறப்பு
தொகுவல்லிக் கொடியிலிருந்து ரத்தம் வந்த இடத்தினை வீரத்திடல் என்று அழைக்கின்றனர். அங்குள்ள மண் ரத்த நிறத்தில் காணப்படுகிறது.
ஆலய தோற்றம்
தொகுஇக்கோயில் கிழக்கு நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. வாயிலுக்கு எதிரே மயில் வாகன மண்டபமும், எண்ணற்ற சன்னதிகளும் அமைந்துள்ளன.
சந்நதிகள்
தொகுநொண்டி சோணை, அரிய சுவாமி, கருப்பண்ண சாமி, செல்வவிநாயகர், சங்கிலி கருப்புசாமி, மருதுபாண்டியர்,பத்திர காளியம்மன், ஆதி பூசாரி, பெரிய கருப்பு, இருளப்ப சாமி, ராக்காச்சி அம்மன், இருளாயி அம்மன், பேச்சியம்மன், லாட சன்னாசி, அக்னி வீரபத்திரசாமி, முத்துக்கருப்பசாமி, பெருமாள், மகாலட்சுமி, அரசமர விநாயகர் போன்ற சன்னதிகளும் கோயிலில் அமைந்துள்ளன.
மயில் வாகன மண்டபம் இக்கோயிலில் அமைந்துள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ சகட தோசம் போக்கும் சண்முகன் - குமுதம் பக்தி ஸ்பெசல் - 19.05.2016 பக்கம் 80
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=17432 வீரக்குடி முருகனார் கோயில் விழா - தினமலர்